சுவிட்சர்லாந்து
உட்பட பல வெளிநாடுகளில், கருப்புப்
பணத்தை பதுக்கி வைத்துள்ள, தொழிலதிபர்கள்
மற்றும் அரசியல் பிரபலங்களின் பட்டியலை
வெளியிட, மத்திய அரசு முடிவு
செய்துள்ளதால், தமிழகத்தை சேர்ந்த அரசியல் புள்ளிகள்
சிலர், கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த
பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள்,
நான்கு பேர் இடம் பெற்றுள்ள
தகவல், இவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக
கூறப்படுகிறது.
பதிலடி:
பிரதமர் மோடி தலைமையிலான,
பா.ஜ., அரசு பதவியேற்றதும்,
'வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப்
பணத்தை மீட்க, நூறு நாட்களில்
நடவடிக்கை எடுப்போம்' என, அறிவித்தனர். அதற்காக
குழு ஒன்றையும் அமைத்தனர்.ஆனால், 'வெளிநாடுகளில் பணத்தை
பதுக்கி வைத்திருப்போரின், பெயர்களை வெளியிடுவதில், சட்டச் சிக்கல் எழுந்துள்ளது.
இந்தியாவுடன், இரட்டை வரி விதிப்பு
ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன'
என,சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய
அரசு திடீர், 'பல்டி' அடித்தது. இதற்கு
காங்., கடும் கண்டனம் தெரிவித்தது.
'வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு' என, கிண்டலடித்தது.
'பட்டியலை வெளியிட்டால், பாதிக்கப்படுவது காங்கிரசார் தான்' என, பா.ஜ., பதிலடி கொடுத்தது.'பரவாயில்லை; கருப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை
வெளியிடுங்கள் பார்க்கலாம்' என, காங்.,தெரிவித்ததை
அடுத்து, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், சட்ட
விரோதமாக கணக்கு வைத்துள்ள நபர்களுக்கு
எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவுசெய்யும் நடவடிக்கைகளை, மத்திய நிதி அமைச்சகம்
துவக்கி உள்ளது.இதைத் தொடர்ந்து,
கருப்புப்
பணத்தை பதுக்கி உள்ள தனிநபர்கள்
மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது.
20 பேர்
பட்டியல்:
முதல் கட்டமாக, சுவிட்சர்லாந்து
நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள,
எச்.எஸ்.பி.சி.,
வங்கி அளித்த பட்டியலில் இடம்
பெற்றுள்ள, 20 பேரின் பெயர்களை வெளியிட
தயாராகி வருகிறது.இந்த பட்டியலில், தமிழகத்தை
சேர்ந்த நான்கு பேர் இடம்
பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. தேசிய
மற்றும் மாநில கட்சிகளை சேர்ந்த,
இந்த நால்வரில் மூவர், மத்தியில் அமைச்சர்களாக
இருந்தவர்கள். ஒருவர், தமிழக அரசியலில்
முக்கிய புள்ளி என, தகவல்கள்
கூறுகின்றன.இந்த பட்டியல் வெளியானால்,
தமிழகத்தில், அவர்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும்
என்பதால், அவர்களும், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளும்கலக்கம்
அடைந்துள்ளன.
சிக்கல்:
இதுகுறித்து,
அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:சொத்து குவிப்பு வழக்கு
தண்டனையால், அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ள
பின்னடைவை
காரணம் காட்டி, தமிழக அரசியலில்
வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.அந்த
இடத்தை, நாங்கள் தான் நிரப்புவோம்
என்றும், சில கட்சிகள் அறைகூவல்
விடுத்துள்ளன. இந்த நேரத்தில், கருப்புப்
பண முதலைகள் பட்டியல் வெளியீடு, அக்கட்சிகளுக்கு, கடும் சிக்கலை ஏற்படுத்தி
உள்ளது.இவ்வாறு, அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment