தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன்
வழங்கப்பட்டதையடுத்து அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி
வரும் நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஊரில்
எந்தவிதமான கொண்டாட்டம் இல்லை என்பதுதான் ஆச்சரியம்.
தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தின்
ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்தில்,
முதல்வரின் டீக்கடை முன்பாக உள்ள
காந்தி சிலைக்கு அருகில் பட்டாசுகள் வெடிக்க
வந்த அ.தி.மு.க.வினர் திடீரென
போனில் ஒரு அழைப்பு வந்ததை
தொடர்ந்து வந்த வேகத்தில் அனைவரும்
பட்டாசுகள் வெடிக்காமல் கலைந்து சென்றனர்.
ஆண்டிபட்டி
தொகுதியில் பேருந்து நிலையம் அருகில் அ.தி.மு.க
தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள்
வழங்கினர்.
முதல்வர்
ஓ.பன்னீர் செல்வத்தின்
தொகுதியான போடியில் அ.தி.மு.க.வின் இளைஞர்
இளம்பெண்கள் பாசறை, தொழிற்சங்கம் என
அனைத்து தரப்பினரும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள்
வழங்கியும் கொண்டாடினர்.
தேனியில்
நகர சேர்மேன் எஸ்.கே.டி
முருகேசன் தலைமையில் அ.தி.மு.க வினர் பட்டாசுகள்
வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
No comments:
Post a Comment