ஜெயலலிதாவுக்கு
ஜாமீன் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக ஹைகோர்ட்டில் அவருக்காக வாதாடிய மூத்த வக்கீல்
ராம் ஜெத்மலானி தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு
வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை
எதிர்த்தும், அவருக்கு ஜாமீன் கேட்டும் கர்நாடக
ஹைகோர்ட்டில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ராம்
ஜெத்மலானி.
ஜெயலலிதாவுக்கு
ஜாமீன் தராமல் ஹைகோர்ட் தவறு
செய்துவிட்டது.. சொல்வது ஜெத்மலானி
ஆனால் அரசு வக்கீலே பல்டியடித்தும்
கூட ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க நீதிபதி
மறுத்துவிட்டார். ஊழல் என்பது மனித
உரிமைக்கு எதிரான செயல் என்று
உச்சநீதிமன்றம் கூறியதை மேற்கோள் காட்டி
ஜாமீன் மறுக்கப்பட்டது.
வாழைப்பழம்
உரிக்கப்பட்டு வாயில் வைக்கப்பட்டதைப்போல, அரசு
வக்கீலே ஜாமீன் வழங்க ஆட்சேபனை
இல்லை என்று கூறியும் ஜாமீனை
பெற்றத்தர முடியாத ராம் ஜெத்மலானி
மீது ஆத்திரமடைந்த அதிமுக தரப்பு வேறு
வக்கீல்களை தேடி ஒருவழியாக கர்நாடகாவுக்காக
காவிரி வழக்கில் ஆஜராகும் பாலி நாரிமனை அணுகியது.
பாலி நாரிமன் சிறிது நேர
வாதத்திலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற்றுக்கொடுத்துவிட்டார். இதுகுறித்து டெல்லியில்
ஜெத்மலானியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ஜெயலலிதாவுக்கு ஜாமீனை மறுத்து ஹைகோர்ட்
தவறு செய்துவிட்டது. அவருக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியே
என்று ஜெத்மலானி தெரிவித்தார்
No comments:
Post a Comment