ஜெயலலிதா
ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, பெரியார் பேட்டியளிப்பதாக திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
செய்யப்பட்டது குறித்து, 'விடுதலை' நாளிதழில் தந்தை பெரியார் விமர்சனம்
செய்துள்ளதாக திருச்சியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
'பெரியார்
பேசினால்…?' எனும் தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள
இந்த போஸ்டரில், ''ஜெயலலிதா ஜாமீன் மனு தள்ளுபடி
செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபடும் அ.தி.மு.க. காலிகள் குறித்து உங்கள்
கருத்து என்ன?'' என்றும்,
அதற்கு,
''சமுதாய ஒழுக்கக் கேடாகப் போனதற்கு காரணம்,
ஒருவன் அயோக்கியத்தனம் செய்கிறான் என்றால் அதை கண்டிக்க
வேண்டுமென்று தோன்றாததுதான்!'' என்றும் எழுதப்பட்டுள்ளது.
பெரியார்
ஈ.வெ.ரா.
கல்லூரி மாணவர்கள்-திருச்சி எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள
இந்த போஸ்டரின் கடைசியில், 'பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
27.01.1957 விடுதலை' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போஸ்டர்கள் ஒட்டி
தங்கள் எதிர்ப்பை காட்டியது குறித்து சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்நிலையில், பெரியார் பேசினால் எனும் பெயரில் ஒட்டப்பட்ட
இந்த போஸ்டரால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment