டெல்லியில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்ய தன்னுடன் பொது விவாதம் செய்ய தயாரா என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலை கிரண் பேடி ஏற்க மறுத்துள்ளார். அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் விவாதம் நடத்த தயார் என தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து டெல்லி சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொதுவிவாதம் நடத்த தயாரா என்று கிரண் பேடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்து இருந்தார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில்,”பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எங்களுக்கு இடையே விவாதம் நடந்தால், இரு முக்கிய கட்சிகளின் திட்டங்களையும் கொள்கைகளையும் மக்கள் தெரிந்து கொள்ள இது ஒரு முன்முயற்சியாக இருக்கும். மக்கள் மதம் மற்றும் சாதியின் பெயரில் வாக்களிக்கின்றனர்.அவர்கள் பிரச்சினைகளை தெரிந்திருக்க மாட்டார்கள். நிலையான பிரச்சினைகள் தொடர்பாக விவாதம் சுமார் 1-2 மணிநேரம் நீடிக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலை ஏற்க மறுத்துள்ள கிரண் பேடி, அவரது சவலை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருடன் விவாதத்தில் ஈடுபடமுடியாது. டெல்லி சட்டசபையில் மட்டுமே விவாதம் நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் இந்த சவாலை வரவேற்றுள்ளது பற்றி கூறிய கிரண் பேடி, அவர்கள் ”இருவரும் நாடகத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் எனது வேலையில் முழுகவனத்தையும் செலுத்தி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி தேர்தலில் காங்கிரஸ் முகமாக விளங்கிவரும் அஜய் மக்கான் கெஜ்ரிவால் சவால் பற்றி கூறுகையில், எதிர்கட்சி தலைவர்களுடன் கட்டமைக்கப்பட்ட விவாதங்களில் ஈடுபடுவதை நான் வரவேற்கிறேன். இது ஒரு ஆரோக்கியமான பாரம்பரியமாக இருக்கும்.இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்ட தொலைக்காட்சி சேனல் அல்லது ஏஜென்சி மூலமாக கட்டமைக்கப்பட்ட விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment