தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டதைத்தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலையாகிறார். அவரை வரவேற்க தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நாம் தமிழர் அமைப்பினர் வேலூர் விரைந்துள்ளனர்.
தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை கடற்படையையும், இலங்கை அரசையும் கண்டித்து நடந்த போராட்டத்தில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார் சீமான். ஆனால் அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவர் பேசியது என்ன தெரியுமா? " ராமேஸ்வர தமிழனை இன்னும் இலங்கை தாக்கினால் தமிழ்நாட்டில் இருக்கும் சிங்கள மாணவர்களை நாங்கள் தாக்குவோம் " இது தான் சீமானை சிறைக்கு தள்ளிய பேச்சு. நான் தெரியாமல் தான் கேட்கிறேன் ' பாகிஸ்தான் ராணுவம் தாக்கினால் பதிலுக்கு இந்திய ராணுவம் தாக்காமல் குப்புற கவுந்து படுத்துக்கணுமா ? இல்ல.., திருப்பி தாக்கினா தான் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்ல அதான். நான் சீமான் பேசியதை நியாயப்படித்த வில்லை. ஒருத்தன் எத்தனை நாளைக்குத் தான் அடியை வாங்கிகிட்டே இருப்பது.(அடி வாங்கினது நானு அதனால நாடு எனக்கு தான்"-னு சொல்லலாமா?) ...திருப்பி அடிப்பேன்னு சொன்னால் தமிழனே, தமிழனை தூக்கி உள்ள போடுறான். தமிழனுக்கு எதிரி தமிழன் தான் இதை நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க இந்திய, இலங்கை அரசியல்வாதிகள்.
சீமான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று நேற்று உத்தரவிட்டது.
சீமான் விடுதலையைத் தொடர்ந்து அவரது இயக்கத் தொண்டர்கள் வேலூர் வந்து குவிந்துள்ளனர். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பட்டாசுகளை வெடித்து தீர்ப்பையும் வரவேற்றுக் கொண்டாடியுள்ளனர்.

இன்று காலை அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் விடுவிக்கப்படவில்லை.
கோர்ட் உத்தரவு இன்னும் வந்து சேரவில்லை என்று சிறை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. அதேசமயம், சிறை வளாகத்திற்குள் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. மாறாக, பத்திரிக்கையாளர்களாகவே இருந்தாலும் சிறைக்கு வெளியில்தான் நிற்க வேண்டும் என்று கூறி விட்டனர்.
இதனால் பத்திரிக்கையாளர்களும், நூற்றுக்கணக்கான நாம் தமிழர் அமைப்பின் தொண்டர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிறைக்கு வெளியே காத்திருக்கின்றனர்
நான் இந்த பதிவை போடுவதற்கு முன்னால் 'சீமான் அப்படி என்னத்தான் பேசுகிறார் பார்ப்போம் என்று அவர் பேசிய போச்சுக்களை கேட்டு பார்த்தேன். அதில் இந்த பேச்சுக்கள் என்னை கவர்ந்தன, சிரிக்க வைப்பதோடு மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் பேசி இருக்கிறார். என்பதால், நீங்களும் கேட்டு சிரிப்பதற்காக அல்ல சிந்திக்கவும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இங்கே உங்கள் பார்வைக்காக வைக்கிறேன். நீங்களும் ஏதோ கேட்டோமா, பார்த்தோமா என்று இல்லாமல் கொஞ்சமாவது சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்
.இன்னும் ஒரு செய்தி சொல்ல வேண்டும் உங்களிடம், நண்பர்களே ! இன்று இலங்கை சுகாதார அமைச்சர் தசநாயகா இன்று பெங்களூர் வருகிறாராமே எவ்வளவு திமிரு பார்த்தீங்களா? இங்கிலாந்தில் ௫௦ ஆயிரம் தமிழர்களால் விரட்டி அடிக்கப்பட்டார் 'நவீனயுக அரக்கன் ராஜபக்சே', அந்த வடுவை நமது நாட்டில் இவன் வந்து தீர்க்க போகிறானா? தமிழன் ஒன்றும் ரோசமானவன் இல்லை, ௫௦ ஆயிரம் பேர் என்ன பாருங்கள் ௬ கோடிக்கும் அதிகமான தமிழன் இருக்கும் நாட்டில் நான் ராஜமரியாதையுடன் போகி வருகிறேன். என்று வருகிறானா? அங்கே ௫௦ ஆயிரம் பேர் செய்ததை இங்கே ௬ கோடி பேர் இருக்கும் நம்மால் முடியாதா? பெங்களூரில் இருக்கும் தமிழர்கள் நமது எதிர்ப்பை காட்ட கிளம்பி செல்லுங்கள். 'ஒலிம்பிக்' ஓட்ட போட்டியில் ராஜபக்சே முதல் இடத்தை பிடிக்கட்டும், இவர் இரண்டாவது இடத்துக்கு வரும் அளவுக்கு ஓட வையுங்கள், வைப்பீர்கள் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment