விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸ்ஸஞ்சே கற்பழிப்பு வழக்கில் கைதாகியுள்ளது குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரு பெண்களுடன் மனமொத்த உறவில் ஈடுபட்டிருந்தபோதிலும், அவர் ஆணுறை அணியாமல் உறவு கொண்டதால்தான் கற்பழிப்பு வழக்கை சுமத்தி அவரை உள்ளே தள்ளியுள்ளனர்.
அஸ்ஸஞ்சே மீது ஸ்வீடன் நாட்டில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இரண்டு பாலியல் பலாத்காரம், ஒரு சட்டவிரோத உறவு, ஒரு கற்பழிப்பு வழக்கு அவை. இந்த வழக்குகளில் அஸ்ஸஞ்சேவுக்கு கைது வாரண்ட்டும் ஸ்வீடனில் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து லண்டன் சென்ற அஸ்ஸஞ்சே போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை ஸ்வீடனுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதேசமயம், அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க முயற்சிப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
அமெரிக்காவின் முகத்தை சில நாட்களிலேயே மாற்றியமைத்த பெருமைக்குரியவர் அஸ்ஸஞ்சே என்பதால் அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதிலிருந்து தப்பிக்க அவரது வக்கீல்கள் முயன்று வருகின்றனர்.
இந் நிலையில் அஸ்ஸஞ்சே மீது ஸ்வீடன் அரசு தொடர்ந்துள்ள வழக்குகளின் சட்டத்தன்மை குறித்து சர்ச்சைகள் வெடித்துள்ளன.
அஸ்ஸஞ்சே மீது தொடரப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்குகள் சட்டவிரோதமானவை என்று அவரது சட்ட ஆலோசனை நிறுவனம் கூறியுள்ளது.
ஆணுறை அணியாமல் உறவு கொண்டதால் அதை கற்பழிப்பாக ஸ்வீடன் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது கேலிக்கூத்தாக உள்ளதாக அஸ்ஸஞ்சேவின் சட்ட ஆலோசனை நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் கூறுகையில், சம்பந்தப்பட்ட இரு பெண்களிடம் அஸ்ஸஞ்சே மனமொத்த உறவில்தான் ஈடுபட்டிருந்தார். விருப்பத்திற்கு மாறாக அவர் உறவு கொள்ளவில்லை. ஆனால் ஆணுறை அணியாமல் உறவு கொண்டதால் அதை கற்பழிப்பாக மாற்றி விட்டுள்ளனர் என்றனர்.
அஸ்ஸஞ்சேவின் வக்கீல்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் காட்லின் கூறுகையில், ஸ்வீடன் நாட்டுச் சட்டப்படி ஆணுறை அணியாமல் உடலுறவு கொண்டால் அவர்கள் மீது கற்பழிப்பு வழக்கை சுமத்த முடியும். இந்த வழக்கில் குறைந்தது 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். இதை அடிப்படையாக வைத்துதான் அஸ்ஸஞ்சேவுக்கு எதிராக ஸ்வீடன் அரசு கற்பழிப்பு வழக்கை சுமத்தி அவரை பழிவாங்க முனைந்துள்ளது.
ஆனால் ஸ்வீடன் நாட்டின் இந்த சட்டம் உலக நாடுகளிடையே கேலிக்கூத்தாகியுள்ளது. மனமொத்த உறவில் ஈடுபட்ட நிலையில், ஆணுறை அணியாததால் அது கற்பழிப்பு என்று கூறுவது மிகவும் சிரிப்புக்குரிய விஷயமாகும். வளர்ச்சி அடைந்த ஒரு நாடு இப்படி ஒரு சட்டத்தை வைத்துக் கொண்டு அஸ்ஸஞ்சேவை பழிவாங்க முனைந்திருப்பது வருத்தம் தருகிறது.
தற்போது அஸ்ஸஞ்சேவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட கடுமையாக போராடி வருகிறது ஸ்வீடன் அரசு. ஆனால் அது இதுவரை கிடைக்கவில்லை. அவர் ஆணுறை அணியவில்லை என்பது மட்டுமே நிரூபிக்கப்பட்ட ஒன்று. மற்றபடி அவர் இரு பெண்களையும் வற்புறுத்தி உறவு கொண்டார் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இதை அந்தப் பெண்களே தங்களது எஸ்.எம்.எஸ்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அன்னா ஆட்ரின் மற்றும் சோபியா விலன் ஆகிய அந்த இரு பெண்களில், ஆட்ரின், அஸ்ஸஞ்சேவுடன் உறவு வைத்துக் கொண்ட பின்னர் தனது ட்விட்டர் தளம் மூலம் தெரிவித்த தகவலில், உலகின் மிகவும் ஸ்மார்ட்டான ஒருவருடன் இணைந்திருந்தேன் என்பதை நினைக்கையில் மிகவும் வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார். இது அஸ்ஸஞ்சேவுக்கு சாதகமான செய்தியாகும்.
ஆட்ரினும் சரி, சோபியாவும் சரி, தன்னை அஸ்ஸஞ்சே கற்பழித்தார் என்று எங்குமே கூறவில்லை என்றார்

இதற்கிடையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அஸ்ஸான்ஜ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு ஹாக்கர்ஸ் குழு ஸ்வீடன் அரசின் இணையதளத்தை ஹாக் செய்து முடக்கி ஸ்வீடன் அரசை அதிர வைத்துள்ளது.
விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட அவர்கள் சுவீடன் அரசின் இணையதளத்தை(http://www.regeringen.se/ ) 12 மணி நேரத்திற்கும் மேலாக செயல் இழக்கச் செய்தனர்.
இன்று அரசு தங்கள் இணையதளத்தை பயன்படுத்த முயன்றபோது அவர்களால் அதற்குள் செல்லமுடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் சர்வரை அணுக முடியவில்லை என்றே வந்துள்ளது என்று ஸ்வீடன் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் நாட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் தான் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அஸ்ஸான்ஜ் கைது செய்யப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்குமுன் விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் விசா இணையதளத்தை ஹாக் செய்தனர். மேலும், அலாஸ்காவின் முன்னாள் ஆளுநர் சாரா பாலின் இணையதளத்தையும் ஹாக் செய்தனர். சாரா அஸ்ஸான்ஜை இரத்தக்கறை படிந்த கைகளுடன் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுபவர் என்று விமர்சித்திருந்தார்

No comments:
Post a Comment