காலை மாலை கால் மீ
இடைப்பட்ட வேளையில் வாட் யு டூயிங்
பதில் அனுப்ப காலம் தாழ்த்த
பதில் அனுப்ப காலம் தாழ்த்த
பத்துக்கும் மேல பிஸி யா ?
வெட்டிநேர குட்டி தூக்கத்தினிலே
டக்கென அதிரும் மிஸ்ஸிடு கால்
தவறிய அழைப்புதானென
தாமதம் செய்தால்
வந்து எச்சரிக்கும் பேச மாட்டியா
இரவில் பேசுகையில்
இதழ் முத்தம் கேடடால்
அதெல்லாம் ஆப்டர் மரேச் ஆம்
அதுவரை பொறுத்திட
இது வைத்துக்கொள் என
கைபேசி திரையில்
சிறு பொம்மை தோன்றிடும்
இதழ் குவித்து
ஆப்டர் மரேச் இல் கொடுக்கிறாள்
அவள் கணவனுக்கு முத்தம்
தாடியோடு நானடி
உன் மடி மீது யாரடி
ஆனந்த சுகத்தில் நீ
நரக வேதனையில் நான்
எவனவன் ஹிட்லரும்,முசோலினியும்
அடுத்த ஜென்மம் எடுதீரானால்
பாடம் கற்றுக் கொள்ளுங்கள்
இவளிடம்
ஜனநாயக நாட்டில்
சர்வாதிகார ஆட்சியை நடத்துவதற்கு
No comments:
Post a Comment