இளவரசர் சார்லஸ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து லண்டன் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் இன்று கூறியுள்ளார்.
"அந்த சம்பவம் மூலம் போலீஸார் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். ஆனால், தாக்குதல் சம்பவத்துக்கு அவர்கள்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்." என்றும் பிரிட்டன் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சார்லஸ் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முழுமையான அளவில் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று லண்டன் காவல்துறையின் தலைவர் பால் ஸ்டீபன்ஸன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்றிரவு, லண்டனின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான வெஸ்ட் என்ட் என்னுமிடத்தில் தனது பிரத்யேக ரோல்ஸ் ராய்ஸ் காரில் மனைவி கமீலாவுடன் சார்லஸ் வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரது காரின் பின்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியது. மேலும், அவரது கார் மீது வெள்ளைநிற பெயிண்ட் வீசப்பட்டது. இச்சம்பவத்தால் பிரிட்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவான அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment