பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவியை தெலுங்கானா ஆதரவாளர்கள் தாக்க முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி ஐக்கிய ஆந்திராவிற்கு ஆதரவு அளித்து வருகிறார். இதனால் அவர் மீது தெலுங்கானா கட்சித் தொண்டர்கள் கடுப்பில் உள்ளனர்.
அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்புவதும், அவரது மகனின் படங்களை தெலுங்கானாவில் திரையிட விடாமலும் செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த காரணங்களால் சிரஞ்சீவி தெலுங்கானா பக்கம் முடிந்த அளவு செல்வதில்லை.
இந்நிலையில் சிரஞ்சீவி தெலுங்கானா பகுதி ஆதிலாபாத்தை அடுத்த அர்ச்சனாகுட்டா பகுதியில் இருக்கும் பிரானஹித்தா தீர்த்தத்தில் புனிதநீராடி தனது தந்தை வெங்கட்ராவுக்கு திதி கொடுத்தார்.
சிரஞ்சீவியின் வருகை பற்றி அறிந்த தெலுங்கானா தொண்டர்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் என்று அவர்கள் சிரஞ்சீவியை தாக்க முயன்றனர். உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். பிறகு சிரஞ்சீவி பத்திரமாக காரில் கிளம்பினார்.

இதை பார்த்த பிறகும் அரசியலுக்கு வர வேண்டுமா? என்று விஜய் சிந்திக்க கூடும்
உண்மைதான் நண்பரே
ReplyDelete