ஈரம் படத்தைத் தொடர்ந்து கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து படம் ஒன்றை எடுக்க இருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
நடிகர் ஆதி மற்றும் நந்தா நடித்த ஈரம் படத்தை இயக்கியவர் அறிவழகன். வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்ட ஈரம் படத்துக்குப் பிறகு இவரது அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் நிலவியது.
இந்நிலையில் இவர் தனது அடுத்த படம் குறித்து அளித்துள்ள பேட்டியில் "எனது அடுத்த படம் இன்னும் பெயரிடபடவில்லை. அத்திரைப்படம் கூடைப்பந்து விளையாட்டை மையமாக கொண்டுள்ளதாகும். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க உள்ளார்.
காதலை அடுத்து விளையாட்டு தான் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும். கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து இது வரை தமிழ் படங்கள் வந்தது இல்லை. அதனால் தான் கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து ஒரு ஆக்ஷன் கதையை காலேஜில் வைத்து நடைபெறுவது போல் வடிவமைத்துள்ளேன். நகுல் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். தமன் இசையமைக்க இத்திரைப்படம் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளது" என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment