விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, January 4, 2011

    எம்.ஜி.ஆர்.தான் உண்மையான புரட்சித் தலைவர்-சீமான்


    உலகின் நிகரற்ற புரட்சியாளன் பிரபாகரனின் போராட்டத்துக்குத் தோள் கொடுத்து துணை நின்ற எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் என்று சொல்லாமல், வேறு எவரைச் சொல்வதாம்?, என்று கூறினார் சீமான்.

    சிறையிலிருந்து வெளிவந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், எம்ஜிஆர் மற்றும் பெரியார் வீர வணக்க நாள் கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் எம்ஜிஆரைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டு, முன்பு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார் சீமான். 

    பின்னர் எம்ஜிஆர்தான் நிஜமான புரட்சித் தலைவர் என புகழாரம் சூட்டினார். அந்தக் கூட்டத்தில் எம்ஜிஆரின் படப் பாடல்களை பாடியும் காட்டினார் சீமான்.

    இந்தக் கூட்டத்தில் தான் பேசியதை ஒரு தனி கட்டுரையாக அவர் எழுதியியுள்ளார். அந்த கட்டுரை:

    சிறையில் இருந்து வந்ததும் முதல் கூட்டம்... இன விடுதலைக்காகப் போராடிய தந்தைக்கும்

    ஈழவிடுதலைக்காக உதவிய தலைவருக்கும் வீர வணக்கம் செலுத்த சென்னையில், எம்.ஜி.ஆர். நகரில் திரண்டோம்!

    எம்ஜிஆரை ஆதரிப்பது அரசியலுக்கா...?

    முதன் முறையாக எம்.ஜி.ஆர். குறித்து முழங்கினேன். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை எம்.ஜி.ஆர். எப்படி எல்லாம் பரப்பினார் என்பதை விளக்கிவிட்டு, நான் வீட்டுக்கு வருவதற்குள் எக்கச்சக்க விமர் சனங்கள்... ''எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் என்று சீமான் எப்படிச் சொல்லலாம்? பெரியாரும் எம்.ஜி.ஆரும் ஒன்றா? இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்காக இருக்கும் கூட்டத்தைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் சீமான்!'' என்கிற வாதங்கள் ஒரு பக்கம். ''எம்.ஜி.ஆரை ஆதரித்துப் பேசும்போதே தெரிகிறது... வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத்தான் சீமான் செயல்படப்போகிறார்!'' என்கிற அனுமானங்கள் ஒரு பக்கம்.

    எம்.ஜி.ஆர். நடித்த படங்களைக்கூட பார்க்கக் கூடாது என மனதுக்குள் சத்தியம் ஏற்றித் திரிந்தவன் நான். திரை உலகுக்கு வருவதற்கு முன்னர் நான் எம்.ஜி.ஆரின் படங்களையே பார்த்தது கிடையாது. 'அழகு என்கிற ஒற்றை வலிமையைத் தவிர, அவரிடத்தில் வேறு எந்த ஈர்ப்பும் இல்லை’ என நினைத்தவன் நான். ஆனால், அப்படி நினைத்ததற்காக, ஈழத்தில் நான் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றேன்.

    பிரபாகரன் முன் குறுகி நின்றேன்...

    ''எம்.ஜி.ஆரை இழந்தது நம் இனத்தின் விடுதலையைத் தள்ளிப்போட்டுவிட்டது. நம் உணர்வுகளையும் உரிமைகளையும் மனமார ஆதரித்த அந்த மனிதரை இவ்வளவு சீக்கிரம் நாம் இழந்துவிட்டோமேடா தம்பி!'' - அண்ணன் பிரபாகரன் இப்படிச் சொன்னபோது குற்றறிவுகொண்டவனாக நான் குறுகிப்போய் நின்றேன். 'எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி!’ என தி.மு.க. தலைவர்கள் திரும்பத் திரும்ப சொன்ன வாதங்களை நிஜம் என நம்பி, என் மூளை பழுதடைந்திருந்த நேரத்தில், அண்ணன் சொன்ன வார்த்தைகள் என் சொரணையில் சூடு போட்டன.

    தலைவர் பிரபாகரனுடன் மூன்று மணி நேரம் பேசினால், அதில் முக்கால் மணி நேரம் எம்.ஜி.ஆரைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

    ''இந்திய அமைதிப் படையை நம்பி நாம் ஆயுதங்களை ஒப்படைத்த நேரம்... நம் ஆயுதங்களை வாங்கிப் போட்டிக் குழுக்களுக்கு கொடுத்து, நமக்கு எதிரான போரைத் தூண்டிவிட்டது இந்திய அமைதிப் படை. மொத்தமாக 600 போராளிகள் மட்டுமே அப்போது இருந்தார்கள். 100 பேர்கொண்ட குழுக்களாகப் போராளிகளைப் பிரித்து அனுப்பிவிட்டு, நான் களத்தில் நிற்கிறேன். எந்தக் கணத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலை. 'பிரபாகரனை நெருங்கிவிட்டோம். இனி அவர் தப்பிப்பது கனவிலும் சாத்தியம் இல்லை!’ என இந்திய அமைதிப் படை கொக்கரிக்கிறது. எது குறித்து சிந்திப்பதற்கும் கணமற்ற வேளையில் தம்பி கிட்டு ஒரு பெட்டியில் பணத்தோடு வந்தார். மொத்தமாக 36 லட்ச ரூபாய். 'தம்பி கஷ்டப்படுவார்... இதை நான் கொடுத்ததாகச் சொல்லி அவரிடம் கொடு. எதுவும் நடக்காது. தம்பியை தைரியமாக இருக்கச் சொல்!’ எனச் சொல்லி, எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பிய பணம் என்றார் கிட்டு. நிஜமாகவே என்னைத் தம்பியாக நினைத்தவரப்பா எம்.ஜி.ஆர்.!'' - அண்ணன் சொல்லச் சொல்ல என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. 

    இந்திய அமைதிப் படை அண்ணனை அழித்தொழிக்க நினைத்த வேளையிலும், தேசியக் குற்றம் எனத் தெரிந்தும் அண்ணனுக்கு எம்.ஜி.ஆர். உதவத் துணிந்தது என் நெஞ்சத்துத் தசைகளை எல்லாம் துள்ளத் துடிக்க வைத்தன. எப்பேர்ப்பட்ட உத்தம தலைவன் பாருங்கள்!

    எம்ஜிஆரே புரட்சித் தலைவர்

    'ஈழம் அடைய எவ்வளவடா தம்பி தேவைப்படும்?’ என எம்.ஜி.ஆர். கேட்க, '100 கோடி ரூபாய் தேவைப்படும்!’ என அண்ணன் சொன்ன உடனேயே, 'நான் தர்றேன்... நான் தர்றேன்... நீ நல்லா சண்டை பிடி!’ என தைரியம் வார்த்த எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசாமல்... வேறு எவரைப்பற்றி அய்யா பேசுவது?

    வாய் முழுக்க தமிழ் தமிழ் என முழங்கிவிட்டு, தமிழருக்கே வாய்க்கரிசி போட்டவரைப்பற்றியா பேசச் சொல்கிறீர்கள்? எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் எனச் சொல்வது பலருக்கும் பொறுக்கவில்லை. அன்னைத் தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உலகத்தின் எந்தப் புரட்சியாளனுக்கும் குறைவு இல்லாத புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் போராட்டத்துக்குத் தோள் கொடுத்து துணை நின்ற எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் என்று சொல்லாமல், வேறு எவரைச் சொல்வதாம்?

    அரசியல் ராஜ தந்திரியாக இன்றைக்கு அரியணையில் அமர்ந்து இருப்பவரிடம் கேட்கிறேன்... ஈழப்போர் தீவிரம் எடுத்த வேளையிலும், மத்திய அரசுக்கு எதிராக வாய் திறக்காமல், கூட்டணியைக் கெட்டியாகப் பிடித்து நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வென்ற உங்களை அரசியல் சாணக்கியராகப் புகழாரம் பாடுகிறார்களே... எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை, ஏனய்யா உங்களின் சாணக்கியத்தனம் எடுபடவில்லை?

    எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி வந்த ஜெயலலிதாவையே 10 வருடங்கள் அரியணையில் உட்காரவைத்ததுதானே உங்கள் அரசியல் ராஜ தந்திரத்தின் மகிமை?

    அரைக்கால் சட்டையோடு உங்களின் கூட்டத்தை ஓடியோடி வந்து ரசித்தவன் - உங்களின் சாலச் சிறந்த தமிழுக்குக் கை தட்டியவன் - காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் ஈர்ப்பால் உங்களின் தடம் ரசித்து, உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டவன், இன்று உங்களைக் கேட்கிறேன்...

    ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை என நினைத்து, அமைதிப் படை துவம்சம் செய்த வேளையிலும் அண்ணன் பிரபாகரனுக்கு அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர். எங்கே... எத்தனை பேர் இறந்தாலும் சரி... 'இருக்கை பத்திரம்’ என நினைத்து இரு கைகளையும் விரித்துக் காட்டிய நீங்கள் எங்கே?

    'பெரியாரின் பேரன் எம்.ஜி.ஆருக்கு வால் பிடிக்கிறானே...’ என உங்கள் தரப்பு வசவாளர்கள் கேலி பேசுவார்கள். பகுத்தறிவுப் பகலவனின் நிஜ வாரிசாக வரித்துக்கொண்ட உங்களைப் பார்த்து அவர்கள் வாய் திறக்காத அதிசயம்தான் எனக்குப் புரியவில்லை. மஞ்சள் துண்டு கேள்விக்கு இதுவரை நீங்கள் நெஞ்சம் திறந்து பதில் சொல்லவே இல்லை, அய்யா... ராஜராஜன் கட்டிய திருவுடையார் கோயிலுக்குள் போகும்போது மட்டும் மஞ்சள் துண்டைக் கழற்றிவிட்டு, பட்டாடை உடுத்திய ரகசியம் என்ன அய்யா? புட்டபர்த்தி சாய்பாபா உங்கள் வீட்டுக்கு வந்தபோது, தாயார் தயாளு அம்மாள் நடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாரே... உங்கள் வீட்டில் இருந்த பெரியாரின் புகைப்படத்தை அன்று மட்டும் பரணில் தூக்கிப்போட்டு விட்டீர்களா? மாய மந்திரத்தால் தங்க மோதிரம் வரவழைத்துக் கொடுத்த சாய்பாபாவை உங்கள் வீட்டிலேயே தங்க வைத்து, வேண்டிய தங்கத்தை பெற்று இருக்கலாமே... புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டி முடிக்காதபோதே எந்த ஜோசியக்காரன் சொல்லி அய்யா அவசரமாகத் திறந்தீர்கள்?

    வெண்தாடிக் கிழவனின் பேரனாகச் சொல்கிறேன்... அய்யா! நீங்கள் செய்த துரோகத்துக்கு, இந்தத் தமிழினம் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறது என்பதை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து, கண்கூடாகப் பார்க்க வேண்டும். 

    'எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி’ என்று எத்தனையோ முறை இனத்தால் அவரைத் தமிழனிடம் இருந்து பிரிக்கப் பார்த்தீர்கள். உண்மையில், மலையாள எம்.கே.நாராயணனுக்கும், கன்னடத்து எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் கை கொடுத்து ஈழத்தைக் கருவறுக்கத் துணைபோனது யார்?

    துக்கமும் தோற்றுப்போன வெட்கமுமாகத் துடிக்கும் தமிழர்களுக்குத் தெரியும்... யார் மலையாளி என்பதும், யார் கொலையாளி என்பதும்!"

    -இவ்வாறு சீமான் குறிப்பிட்டுள்ளார்.



    Posted by விழியே பேசு... at 12:27 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ▼  January (439)
      • ஸ்ருதிக்கு குவியும் பட வாய்ப்புகள் பொறாமையில் முன்...
      • திருச்சூரில் நவ்யா நாயர் குழந்தைக்கு பெயர் சூட்டு...
      • ஆர்யா, விஷால் கண்ணாமூச்சு காத்திருக்கும் இயக்குனர்...
      • அசர வைக்கும் அ.தி.மு.க., தேர்தல் வியூகம்: திசை மாற...
      • விரைவாக விளக்கம் கொடுப்பார்... -சூர்யாவின் அடுத்த ...
      • கவர்ச்சி வேஷம் கொடுங்க!-அஞ்சலி
      • 3 இடியட்ஸ்(நண்பன்) படப்பிடிப்பு: விஜய், இலியானாவை ...
      • 'சீடன் என் படமல்ல!' - தனுஷ்
      • எந்திரன் வரவு செலவு கணக்கு அறிக்கை சன் டிவி வெளிய...
      • கவுதம் மேனன்னின் நடுநிசி நாய்கள் படத்திற்கு ஏ சான்று
      • ராஜபக்சேவுக்கு புற்று நோய்?:தமிழர்களை திசைதிருப்பு...
      • வெற்றிமாறனை கஷ்ட்டப்படுத்திய நடிகர்
      • சூர்யாவின் பேராசையும் பெரு நஷ்டமும்!
      • த்ரீ இடியட்ஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யா!
      • மனைவிக்கு துணை முதல்வர் பதவி :அதிமுகவுடன் கூட்டணிக...
      • ஷாரூக், கஜோலுக்கு பிலிம்பேர் விருதுகள்!
      • ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்
      • மாணவர்களைக் கண்காணிக்க ரேடியோ டேக் பொருத்துவதா?-யு...
      • திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை எவை கருணாநிதி ...
      • திருத்தணியில் 'திகுடுமுகுடு' காதல்
      • காதலர் தினத்திற்கு 2 படம்
      • மல்லிகா ஷெராவத்தின் 17 முத்த சாதனை முறியடிப்பு!
      • செக்ஸ் ஜோதிடர் ஈஸ்வரன் கவர்ச்சி உடை அணிய வைத்து ஆப...
      • ரஜினி மகள் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் திரும்பினார்...
      • காதலர்களுக்காக சிம்பு கண்டிஷன்!
      • சின்ன சின்ன சினிமா செய்திகள்: என்னாச்சு இந்தப் பெண...
      • `3 இடியட்ஸ்' படத்தில், மீண்டும் விஜய்! :பிப்ரவரி 7...
      • ரஜினியை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது -நாகர்ஜுனா
      • விஜய் NDtv க்கு அளித்த பரப்பரப்பான பேட்டி
      • ஜேசுதாசுக்கு சுவாதி சங்கீத விருது
      • 'சூப்பர்' பட சிறப்புக் காட்சியில் ரஜினி!
      • 150 பெண்ணை மயக்கிய கோவை செக்ஸ் ஜோதிடர்; பரபரப்பு த...
      • ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழ...
      • ஷங்கர் படத்திற்கு சூர்யா கேட்ட சம்பளம்
      • இது புதுசா, அல்லது அதேதானா? -குழப்பும் ராணாவும் சு...
      • குழப்பத்தில் விஜயகாந்த் விரக்தியில் விஜயகாந்த் ரசி...
      • நடிகை ரஞ்சிதா பெங்களூர் ராம் நகர் கோர்டில் ரகசிய வ...
      • நடிகை மீனாவின் குழந்தை பெயர் சூட்டு விழா பெயர்...
      • நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த வனிதா!
      • விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: போலீசாரிட...
      • செல்வராகவன் - கமல் கூட்டணியில் புதிய படம்
      • “ராணா” படத்தில் 2 நாயகிகள்: ரஜினி ஜோடியாக அனுஷ்கா,...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :. தனுஷ் செய்த ஜாங்கிரி
      • பிரியங்கா சோப்ரா, காத்ரீனாவிடமிருந்து ரூ. 12 கோடி ...
      • ரஜினியின் அடுத்த படம் ராணா:அனிமேஷன் படம் அல்ல மூன்...
      • தமிழக அரசின் கலைமாமணி விருது பெறுபவர்கள் பட்டியல்
      • பொம்பள சிவாஜி.....!!!
      • ஏ.ஆர். ரகுமானுக்கு கிரிஸ்டல் விருது, உலக பொருளாதார...
      • நடிகர் ஸ்ரீகாந்துக்கு பெண் குழந்தை பிறந்தது!
      • மன்மதன் அம்பு சுமாரான படமா? : மாதவனை எச்சரித்த கமல்
      • அழகுக்காக பல்லை சரி செய்தார் விஜய்
      • 'கரன்சி மெஷினாக' மாறிய சச்சின்! :ஒரு நாள் வருவாய் ...
      • விஜய் தந்தை தமிழக அரசுக்கு ஃபைன் கட்டினார்!
      • அவன் இவன்: தண்ணீருக்குள் 6 நாள் ஊறிய விஷால்!
      • பார்வையற்றோருக்கு உதவுங்கள் -ஸ்ரேயா
      • நயன்தாரா அம்மாவாக நடித்ததில் தவறில்லை -மனிஷா கொய்ராலா
      • த்ரீ இடியட்ஸ் லேட்டஸ்ட் நிலவரம்
      • ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டரை கன்னத்தில் அறைந்த சி...
      • மறைந்த எம்.எல்.ஏவுக்கு எதிராக மாரியம்மனுக்கு காங்க...
      • பில்லா 2-ல் அஜித் நாயகியாக அனுஷ்கா
      • கலைஞர் மனைவி கோவில் கோவிலாக சென்று சாமிதரிசனம் :ஐய...
      • தமிழர்களின் எதிர்ப்பால் ராஜபக்சே அமெரிக்காவை விட்ட...
      • நயன்தாரா-பிரபுதேவா லேட்டஸ்ட் ஹாட்டாபிக்ஸ்!
      • ஹீரோவாகிறார் கண்ணதாசனின் பேரன்: மற்றும் பட போட்டோ...
      • இந்தி, தெலுங்கு படத் தோல்விகள்... தமிழிலாவது வெற்ற...
      • ப்ரியங்கா சோப்ராவுக்கு 11 வீடுகள்!! -வருமான வரித் ...
      • 'சிம்பு'வுடன் இணையும் தனுஷ்!
      • பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் ப...
      • ரஜினியுடன் நடிக்க கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா
      • இலங்கைக்கு கச்சதீவு சீனாவுக்கு அருணாசல பிரதேசமா......
      • காவலன் ஹிட் மற்றதெல்லாம் பிளாப்பே...
      • நித்யானந்தா ஆசிரமத்தில் ரஞ்சிதாவுக்கு புதிய பதவி
      • விஜய் நேற்று ஜெயா டிவி -க்கு அளித்த பரபரப்பு பேட்ட...
      • அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட இருக்கு...
      • விஜய்க்கு சீமான் கொடுத்த உத்தரவாதம்!
      • மங்காத்தா கதை - இயக்குநரே சொன்னது ...
      • இந்திக்கு போகிறார் சிம்பு ...
      • இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வி அடையும் அபாயம்...
      • தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜ...
      • அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்து தந்தி அனுப்ப ச...
      • ரஜினியுடன் நடிக்க தீபிகாவுக்கு அழைப்பு
      • கோடை விடுமுறையில் 'மாப்பிளை' வானம் எப்போது வரும்?
      • தொழில் அதிபர் மகனுடன் காதல்: தீபிகா படுகோனேக்கு ரூ...
      • அரசியலுக்கு வந்தால் ஊழலை எதிர்ப்பேன்; விஜய் பரபரப்...
      • பின்தங்கினான் காவலன் :சென்னை பாக்ஸ்ஆபீஸ் ரிப்போர்...
      • தெரியுமா சங்கதி...? விஜயின் அடுத்த படத்திக்கும் ப...
      • நித்யானந்தாவின் வாரிசாகிறார் ரஞ்சிதா
      • மகனை ஒப்படைக்க கோரி வனிதா சாலை மறியலால் :போலீஸ் தா...
      • சுனேனா அழக்காரணம் என்ன?
      • சரத் பொன்சேகாவின் எம்.பி. பதவி பறிப்பு செல்லும்: ச...
      • மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு:விருது பெறு...
      • ஆஸ்கர்: 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை
      • மாணவி அருஷி கொலை வழக்கு: கோர்ட்டுக்கு வந்த தந்தை ம...
      • த்ரி இடியட்ஸ் படப்பிடிப்பு ஊட்டியில் இன்று துவங்கியது
      • சம்பளத்தை ஏற்றினார் தனுஷ்
      • "நாங்க எப்ப சொன்னோம் மாநாடு நடக்குதுன்னு" -விஜய் ப...
      • உதயநிதி ஸ்டாலினை வைத்து கொண்டே...
      • ரசிகர்கள் ரொம்ப விவரமாயிட்டாங்க! சொல்கிறார் ஸ்ரேயா!!
      • தமிழ் படங்களுக்கு முழுக்கா...? -அசின் பதில்
      • புத்த மடத் தாக்குதல் குறித்து சீமான் கருத்து
      • சென்னையில் புத்த மட தாக்குதலில் 4 பேர் காயம் : இலங...
      • இலங்கை தூதரகம் முற்றுகை :விடிதலை சிறுத்தைகளின் தேர...
      • சர்ச்சை கதையை கைவிட்ட கமல்
      • விளம்பரம் இல்லாமல் விண்ணைத் தொட்ட காவலன்!
      • செல்வராகவன் - கீதா செம ரொமான்ஸ் கதை
      • 'மங்காத்தா' திரைக்கதை அமைப்பதில் புதிய முயற்சி
      • காதலித்தால் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் -...
      • ரஷ்யாவில் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 31 பே...
      • 'யாராக இருந்தாலும் ஒருதடவைதான்!' -விபச்சார வழக்கில...
      • செல்வராகவனுக்கு மிரட்டல் விடுத்த பா.ம.க., முக்கியப...
      • விஜய் பங்கு பெற்ற காபி வித் அனு - வீடியோ
      • பசங்களோட பேச மாட்டேன்! :ஆடுகளம் நாயகி டாப்ஸி
      • ஆடுகளம் பற்றி விசாரிக்கும் ஸ்ரேயா
      • ஜெயசூர்யா விளையாட சீமான் எதிர்ப்பு; கிரிக்கெட் மைத...
      • காங்கிரஸாரால் தடை செய்ய கோரும் "ஈழத்தில் இனக்கொலை"...
      • சிம்புவுக்கு அறுவைச் சிகிச்சை...வானம் காதலர் தினத்...
      • காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை;...
      • கவுதம்மேனன் படத்தில் இருந்து அசின் நீக்கம்
      • இலங்கையில் ரவுடிகள் மிரட்டல்: தேர்தலில் போட்டியிட ...
      • மலையாளத்தில் 'மாமனாராகும்' பாக்யராஜ்!
      • ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்ட மீனவப் பெண்கள்
      • வானத்தில் புதிய சூரியன் தோன்றும்: விஞ்ஞானிகள் தகவல்
      • வரி ஏய்ப்பு: நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை
      • சிறுத்தை காமெடி வீடியோ
      • காவலன் வீடியோ பாடல்கள்
      • ஊத்தங்கரை கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றது யார்?
      • ரஷியாவில் 12 வயது சிறுவனுக்காக பள்ளியில் படிக்கும்...
      • கோவில் வாசல் முன்பு நடிகைகள் கவர்ச்சி நடனம்: பக்தர...
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.