எனக்கு மனைவியாக வருபவர் ஒரு புத்திசாலியாக இருக்கத் தேவையில்லை ; மக்குப்பெண்ணாக இருந்தால் போதும் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். பருத்தி வீரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் சிறுத்தை படம் பொங்கலுக்கு ரீலிஸ் ஆகவிருக்கிறது. படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இந்த சிறுத்தை என்றாலும் ஒரிஜனலுக்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை செஞ்சுருக்கோம். மறுபடியும் இதை தெலுங்குல ரிலீஸ் பண்ணப் போறோம், என்றார். படத்தில் போலீஸ் மற்றும் திருடனாக நடித்திருக்கும் கார்த்தியிடம், திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. எப்படிப் பட்ட பெண் உங்களுக்கு மனைவியாக வர வேண்டும் என அவரிடம் கேட்டதற்கு, எனக்கு மனைவியாக வரும் பெண் புத்திசாலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்குப்பெண்ணாக இருந்தால்தான் ரொம்ப சவுகரியம். புத்திசாலியாக இருந்தால் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். நான் மட்டுமல்ல ; எல்லா ஆண்களுமே இப்படித்தான் விரும்புவார்கள், என்றார்
No comments:
Post a Comment