'நடுநிசி நாய்கள்' படம் ஓர் உண்மைக் கதையே என்கிறார், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
இப்படம் குறித்து கேட்டதற்கு, "அடுத்தடுத்து காதல் கதைகள் வேண்டாம் என்று நினைத்து இந்த படம் செய்து இருக்கிறேன். எனக்கு இந்த மாதிரி படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதுவும் ஒரு உண்மை கதை தான். இந்த மாதிரியும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறேன்
சிறு வயதில் பாலியல் துன்புறுத்தல், குழந்தைளை பாலியல் ரீதியில் கொடுமைகள் இழப்பது நடந்தால், அதைப் பற்றி பேசாமல் இருந்தால் என்ன ஆகும் என்பதை பதிவு செய்திருக்கிறேன்.
பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றால், அதைப் பற்றி பேச வேண்டும். அவ்வாறு பேசாமல், அதை இன்னொருவர் மீது காட்ட கூடாது. அதற்கென ஒரு Help Line இருக்கிறது. அதில் தொடர்பு கொண்டு மீளலாம்.
'நடுநிசி நாய்கள்' படத்தை அடுத்து 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படம் பண்றேன். ஜனவரி 15ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறேன். 4 பசங்க, 3 பொண்ணுங்க வச்சு ஒரு பொழுதுபோக்கு படம் தான் அது. நடிகர்கள்கிட்ட பேசிகிட்டு இருக்கிறேன். யார் நடிக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை. தமிழ்ல இருந்து ஒருவர் தெலுங்குல இருந்து ஒருவரை வைத்து தமிழ் தெலுங்குனு இரண்டு மொழிகளும் ரீலிஸ் பண்ணத் திட்டமிட்டுள்ளேன்," என்றார் கெளதம் வாசுதேவ் மேனன்
இவன் ஏற்கனவே வேட்டையாடு விளையாடு படத்தை ஆங்கிலத்திலிருந்து சுட்டான் (படம் பேரு Red Dragon)
ReplyDelete