பருத்திவீரன் படத்தின் மூலம் ஹிட் டைரக்டர் ஆன அமீர், தற்போது ஜெயம் ரவியை நாயகனாக வைத்து ஆதிபகவன் படத்தை இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் ஒரு அட்டகாசமான இந்திப் பாடல் இடம்பெறுகிறதாம். இதற்காக அட்டகாசமான ட்யூன் போட்டிருக்கிறார் யுவன். அந்த பாடலை ஷ்ரேயா கோசல் மற்றும் ஷாரீப் பாடியிருக்கிறார்கள். பாடலும், ட்யூனும் பட்டையை கிளப்பும் வகையில் அமைந்திருப்பதால் நல்ல லொகேஷனில் படமாக்க வேண்டும் என விரும்பும் அமீர், அதற்கான இடத் தேர்வில் பிஸியாக இருக்கிறாராம்.
எங்கே போனது அமீர் அவர்களின் தமிழ் மொழி பற்று படம் வியாபாரம் ஆக வேண்டும் என்றால், மொழி பற்று காற்றில் பறந்து விடுகிறதே! இவர்களெல்லாம் சிங்கள மக்களிடம் தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்றால், தங்கள் படங்களில் சிங்கள பாடல்களையும் வைப்பார்கள், ராஜபக்சேவை வைத்து படத்திற்கு விழாவும் எடுப்பார்கள்.இவர்களுக்கு தேவை தமிழ் பற்று அல்ல துட்டு இதற்காக எதுவும் செய்வார்கள் இந்த தில்லாலங்கடி ஆசாமிகள். நாம் தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment