படித்தவர்களுக்காக மட்டுமே படமெடுப்பவர் என மனைவி சுகாசினியால் பாராட்டப்பட்ட மணிரத்னம், இப்போது தமிழ் இலக்கியத்தின் பெருமைகளுள் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கும் முயற்சியில் உள்ளார்.
அவரது இந்தத் திட்டத்துக்கு சன் டிவி நிதி உதவி அளிக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. படத்துக்கு ரூ 200 கோடி பட்ஜெட் என்றும், இதன் ஒரு பகுதியை முழுமையான சன் பிக்சர்ஸ் வழங்கும் என்றும் கூறுகிறார்கள்.
மிகப்பெரிய, கற்றோரும் வியக்கும் அற்புதமான நாவல் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன். இதற்கு நிகரான இன்னொரு தமிழ் சரித்திர நாவல் இதுவரை எழுதப்பட்டதில்லை என்று புகழப்படும் அளவு பிரமாண்டமானது அதன் விஸ்தாரம். கல்கியின் நடையும், சரித்திர நாயகர்களான வந்தியத் தேவன், ராஜ ராஜசோழன், குந்தவை போன்றவர்களை மையப்படுத்தி அவர் கதை புனைந்திருந்த விதமும் படிப்பவரை வேறு உலகத்துக்கு இட்டுச் செல்லும் வன்மைமிக்கது.
இந்த நாவலை படமாக்க அமரர் எம்ஜிஆர் முயன்றார். இயக்குநர் மகேந்திரன் இதற்கான திரைக்கதையை எழுதினார். ஆனால் படமாக்கவில்லை.
பின்னர் கமல்ஹாஸன் இந்தக் கதையை படமாக்கப் போவதாகக் கூறினார். ஆனால் நடக்கவில்லை. இதற்கிடையே ரஜினி - கமலை வைத்து இந்தக் கதையை சன் டிவி படமாக்கப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அதிலும் உண்மையில்லை என்றானது.
இப்போது, பொன்னியின் செல்வனை படமாக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். நடிகர் நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள்.
சன்டிவி தயாரிப்பில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் ரஜினி-கமல் நடிப்பார்களா? அல்லது வேறு நடிகர்கள் நடிப்பார்களா? என்பது முடிவாக வில்லை என்றாலும், அதிக பொருட் செலவில் தயாராக இருக்கும் இந்த படத்தில் போட்ட பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்றால் ரஜினி-கமல் போறவர்களை வைத்து எடுத்தால் தான் சாத்தியமாகும். என்பதால் ரஜினி-கமல் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதி உதவி செய்யும் என்று செய்திகள் கசிந்துள்ளன. ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க சன் பிக்சர்ஸ் மறுத்துவிட்டது. மணிரத்னம் தரப்பிலும் மவுனம் சாதிக்கப்படுகிறது.
பொறுமையாக பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
ReplyDelete