ரஜினி கடைசியாக 2000-வது ஆண்டு “புலந்தி” எனும் இந்தி படத்தில் கவுரவ வேடத்தில் நடித் தார். அதற்கு முன் அவர் நடித்த “பூல் பனே ஆங்க் ரே” என்ற இந்திப் படம் அங்கு 25 வாரங்கள் ஓடியது. சிவராஜ்குமாரின் 100-வது கன்னட படமான ஜோகையாவில் கவுரவ தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
அவர் அடுத்து நடிக்கும் தமிழ் படத்தை இயக்குவது யார் என்று பல்வறு யுகங்கள் கிளப்பியுள்ளன. கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய மூவரில் ஒருவர் இயக்குவார் என்ற பேச்சு அடிபடுகிறது.
ரஜினியை வைத்து முத்து, படையப்பா ஹிட் படங்களை கொடுத்தவர் ரவிக்குமார். சிவாஜி புரொடக்ஷன்ஸ், சத்யா மூவிஸ், பஞ்சு அருணாசலம் கம்பெனி ஆகிய மூன்று பட நிறு வனங்களில் ஒன்று ரஜினி படத்தை தயாரிக்கும் என தெரிகிறது.
No comments:
Post a Comment