ஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது இலங்கை ராணுவம் அரங்கேற்றிய அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை தொடர்ச்சியாக ஒளிபரப்ப லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் இலங்கை ராணுவத்தின் மிருக முகத்தை உலகத்திற்கு அம்பலப்படுத்தவும் சானல் 4 திட்டமிட்டுள்ளது.
சானல் 4 இதற்கு முன்பு ஒளிபரப்பிய சில கொடூரமான போர்க்குற்ற, படுகொலைக் காட்சிகளை விட இவை மிக பயங்கரமானவை, சிங்கள ராணுவத்தின் குரூர முகத்தை கிழிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சானல் 4 ஒளிபரப்பிய சில வீடியோக் காட்சிகள்தான் ஐ.நா. நிபுணர் குழுவுக்கு மிகப் பலமான ஆதாரமாக அமைந்தது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது சானல் 4 ஒளிபரப்பவுள்ள இதுவரை வெளிவராத மிகக் குரூரமான போர்க்குற்றக் காட்சிகளால் இலங்கைக்கு மேலும் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் சுயரூபம் அம்பலமாகி விட்ட நிலையிலும், தொடர்ந்து இலங்கைக்கு சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு, அதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் சில நாடுகளையும், மனிதாபிமான பாதைக்கு இட்டுச்செல்ல இந்தக் காட்சிகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகையே அதிர வைக்கும் வகையிலான பல்வேறு போர்க்குற்றக் காட்சிகள் அடங்கிய வீடியோக்களை சானல் 4 வைத்துள்ளது. இருப்பினும் அவற்றில் சிலவற்றையே அது இதுவரை ஒளிபரப்பியுள்ளது. அவையே மிகப் பயங்கரமான கோரத்தை வெளிக்காட்டிய நிலையில் அது ஒளிபரப்பப் போகும் வீடியோ காட்சிகள் உலகை உலுக்கும் வகையில் அமையும் என்றும் பதைபதைப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment