ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை ஆதாரமற்றது, அவதூறானது, இலங்கையின் பெயரைக் கெடுக்கும் முயற்சி என்று ராஜபக்சே அரசில் அமைச்சராக வாழ்க்கையை ஓட்டி வரும் கருணா கூறியுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து கருணா கூறுகையில்,
ராஜபக்சே தலைமையிலான அரசு மனிதாபிமான முறையில்தான் போரை நடத்தியது. போருக்குப் பின்னர் வடக்கு மாகாண அபிவிருத்திக்காக ரூ. 300 கோடி வரை ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது. உலக அரங்கில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சியாக இது கருதப்பட வேண்டும்.
இப்போது இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ளது.
பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இதனைக் கொண்டு இலங்கையை தண்டிக்க முடியாது என்று கூறியுள்ளார் இந்தக் கருணா.
No comments:
Post a Comment