இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தி மே 2ஆம் தேதி கோவையில் மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்து.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,
போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள ராஜபக்சே மீது, ஐ.நா. மன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஐ.நா.வை இந்தியாô வலியுறுத்தக் கோரியும் அனைத்துக் கட்சியின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்து என முடிவு செய்யப்பட்டது. கோவையில் வரும் மே 2ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணி அளவில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கும் வரை பேரணி, போராட்டம் போன்றவை நடத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment