ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படம் “ராணா”. நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.“ராணா” படப்பிடிப்பு இன்று துவங்கியது. வட பழனியில் உள்ள ஏ.வி.எம். பிள்ளையார் கோவிலில் ராணா பெயர் பலகை மற்றும் படப்பிடிப்பு கருவிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இப்படம் 16-ம் நூற்றாண்டு கதை என்பதால் மன்னர் கால ஆடை அணிந்து ரஜினி வந்து இருந்தார். ரஜினியும் தீபிகா படுகோனேயும் சாமி கும்பிட்டனர். பின்னர் பஞ்சு அருணாச்சலம் கிளாப் அடிக்க ரஜினி நடித்த முதல் காட்சியை கே. பாலச்சந்தர் படமாக்கினார். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கில் தீபிகா படுகோனேவின் பாடல் காட்சி படமானது.
விழாவுக்கு இதுவரை ரஜினி படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். படப்பிடிப்பு துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், ஏ.வி.எம் சரவணன், பஞ்சு அருணா சலம், வாலி போன்றோர் காலை தொட்டு ரஜினி வணங்கினார். எஸ்.பி. முத்துராமன், எஸ்.ஏ. சந்திரசேகரன், சீடுர்.சி. சக்தி, கே. நடராஜ், மகேந்திரன், கலைபுலி தாணு, எழுத்தாளர் சோ, வைரமுத்து, நடிகர் பிரபு, ராம்குமார், கே.சீடுர்.ஜி., கலைஞானம், சீடுர்.டி. சக்தி முக்தா சீனிவாசன், சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் அஸ்வின் மற்றும் சி.வி. ராஜேந்திரன், ஐஸ் அவுஸ் தியாகு, மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்கார வேலன், மவுனம் ரவி, ரியாஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.
மூன்று கேரக்டர்களில் பெரிய ரஜினி வேடத்தில் வரும் ரஜினி இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்றார். பத்திரிகைகளிலும் இந்த ரஜினியின் கெட்டப்தான் வெளியாகி உள்ளது. இளைய ரஜினி வேடம் வெளியிடப்பட வில்லை. புராண காலத்து படம் என்பதால் நகைகளை விநியோகிக்க பிரபல நகை கடையொன்றுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கள் அமைக்க சார்லஜ் டார்வி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹாலிவுட் ஹிட் படமான “மாட்ரீக்ஸ்” படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ் செய் தவர். ராஜீவன் அரங்குகள் அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார்.ராணா படக்குழுவினருக்கு போட்டோ ஒட்டிய விசேஷ அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதை கழுத்தில் அணிந்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். பாதுகாப்புக்கும் தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment