பாலாஜி ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்! உத்தம புத்திரன் திரைப்படத்தை தயாரித்த கம்பெனிதான் இது. தனுஷ், ஜெனிலியா நடித்த இப்படத்தின் பிரஸ்மீட்டில் தன்னை வைத்து படம் எடுத்த முந்தைய கம்பெனிகளுக்கு கொடுக்காத மரியாதையை இந்த நிறுவனத்திற்கு கொடுத்தார் தனுஷ். எப்படி தெரியுமா?
என்னை அப்படி ஸ்பெஷலா கவனிச்சுக்கிட்டாங்க இந்த தயாரிப்பாளர்கள். இந்த கம்பெனி எப்ப கால்ஷீட் கேட்டாலும் கொடுக்க தயாரா இருக்கேன்! இதுதான் தனுஷ் சொன்ன சந்தோஷ வார்த்தைகள். குறித்த நேரத்திற்கு முன்பே பேமெண்ட். மனம் குளிர மற்ற மற்ற சப்போர்ட் என்று இவர்களது அப்ரோச் ரொம்பவே பிடித்திருக்கிறது மற்ற ஹீரோக்களுக்கும். இதையெல்லாம் கேள்விப்பட்ட விமல் சும்மாயிருப்பாரா? இந்த நிறுவனம் வந்து கால்ஷீட் கேட்டதுமே கொடுத்துவிட்டாராம். சம்பளம்? சுமார் எழுபது லட்சம் என்கிறது கோடம்பாக்கத்தின் உறுதிப்படுத்தப் படாத தகவல் ஒன்று.
விமல் மடங்கியது இந்த சம்பளத்திற்காக மட்டுமல்லவாம். திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்கு எந்த வெளிநாட்டுக்கும் போகவில்லை அவர். தற்போது ஒப்புக் கொண்ட படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் வெளிநாடுகளில்தான் நடக்கும். உள்ளூரில் வரப்போவது மொத்தம் பத்தே நிமிட காட்சிகள்தான் என்றார்களாம்.
தயாரிப்பாளர் பணத்தில் தேனிலவு? ம்ம்ம் அதுக்கெல்லாம் கொடுத்து வச்சுருக்கணும்!
No comments:
Post a Comment