கோவை மாவட்டம், வால்பாறையில் நடிகர் கலாபவன்மணி செய்தியாளர்களிடம்,
’’கேரளாவில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படுத்தப்படும் எண்டோசல்பான் நிலத்தையும், நீரையும் பாதித்துள்ளது. விவசாயிகள் பலர் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்த மருந்தை தடை செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் கேரளாவில் முதல்வர் அச்சுதானந்தன் உண்ணாவிரதம் இருந்தார். இதில் நடிகர்கள், எழுத்தாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். எண்டோசல்பான் பூச்சி மருந்தை தடை செய்ய நடிகர்களும் வலியுறுத்தி வருகிறோம்.
வால்பாறைக்கு சூட்டிங் லொகேஷன் பார்க்க வந்தேன். வரும் வழியில் சோலையார் அணை அருகே கேரள பகுதியான மழுக்குப்பாறையில் உள்ள தேயிலை தோட்டங்களில் எண்டோசல்பான் பயன்பாடு மற்றும் பாதிப்பு குறித்து நானே ஆய்வு நடத்தினேன்.
எண்டோசல்பான் பூச்சி மருந்தை தடை செய்யக்கோரும் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதற்காக தன்னார்வமாக இதை மேற்கொண்டேன். அங்கு கிடைத்த தகவலை கேரள அரசுக்கு தெரிவிப்பேன்’’என்று கூறினார்.
தமிழக எல்லைப்பகுதியில் அமைந்த கேரள தேயிலை தோட்டங்களில் கலாபவன்மணி ஆய்வு மேற்கொண்டது வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment