இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை ஐநா அறிக்கை உறுதிபடுத்துகிறது.
போர் முடிந்த பிறகும் தமிழர்களை கொல்வதையும், தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வருவதையும் ஐநா அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.
ஐநாவின் அறிக்கை ஈழத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் இனம் முழுவதுக்கும் ஒரு முக்கியமான அறிக்கையாகும்.
தெற்கு ஆசியாவில் முக்கியத்துவம் உடைய இந்தியாவுக்கும் அந்த அறிக்கை முக்கியமானதாகும். எனவே, ஐநா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment