ஒரு தடவ முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்! புகழ் பெற்ற இந்த வசனத்தை எழுதியது கே.எஸ்.ரவிகுமார் என்றால் யாரும் நம்ப போவதில்லை. ஆனால் நடக்கிற நடப்பை பார்த்தால் அந்த வசனம் இவர் எழுதியதுதானோ என்ற சந்தேகம்தான் வருகிறது.
ராணா படம் பற்றி இஷ்டத்துக்கு செய்தி போடுகிறீர்கள். என்னை கேட்காமல் எதையும் எழுதக் கூடாது. இப்படி தாம் து£ம் என்று பத்திரிகையாளர்களை அழைத்து ஒருமையில் பேசினார் கே.எஸ்.ரவிகுமார். அந்த பிரஸ்மீட்டில் இவரது அர்ச்சனையை கேட்டும் எதிர்ப்பே தெரிவிக்காமல் திரும்பினார்கள் அத்தனை பேரும். அது போகட்டும். அங்கு பேசிய ரவிகுமார், நீங்கள்ளாம் ராணா என்று எழுதறீங்க. நான் சொல்றேன். ரெண்டு சுழி ரானாதான் அது. இனிமே எழுதும் போது என்னை கேட்டுட்டு எழுதுங்கன்னு இதுக்காகதான் சொல்றேன் என்றெல்லாம் பொறிந்தார்.
ஆனால் இன்று வெளியாகியுள்ள ராணா படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பில் கே.எஸ்.ரவிகுமார் சொன்ன மாதிரி இரண்டை சுழி ன வுக்கு பதிலாக ராணா என்று மூன்று சுழி ண தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்ப சொல்லுங்க. ரவிக்குமார் பேச்சை அவரே கேட்பதில்லையோ!
No comments:
Post a Comment