ஐ.நா. போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு, கொழும்பில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்களை மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்து வருகிறது என்றும், இந்த ஏற்பாடை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீஸ் செய்துள்ளார் என்றும் இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
கொழும்பில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின்போது, ஐ.நா. போர்க்குற்ற அறிக்கை விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வருமாறு அமைச்சர் பெரீஸ் கேட்டுக்கொள்வார் என செய்திகள் கூறுகின்றன.
கடந்த 21ம் தேதி கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்த, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்து எடுத்துக் கூறியிருந்தார்.
தற்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையால் இலங்கை அரசு பதற்றமடைந்துள்ளதாகவும், எனவே வெளிநாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment