அருணாச்சலப் பிரதேச முதல் அமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு மற்றும் அவருடன் சென்ற 4 பேரும் பாதுகாப்பாக உள்ளனர். இதனை அம்மாநில கவர்னர் ஜே.ஜே.சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
அருணாசலபிரதேச மாநில காங்கிரஸ் முதல் அமைச்சர் டோர்ஜி காண்டு உள்பட அனைவரும் பத்திரமாக உள்ளதாக அம்மாநில கவர்னர் ஜே.ஜே.சிங் தெரிவித்துள்ளார்.
அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு (56) பயணம் செய்த ஹெலிகாப்டர் 30.04.2011 அன்று காலை காணாமல் போனது. தவாங் நகரில் இருந்து தலைநகர் இடாநகர் நோக்கி புறப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் முதல்வரின் தனிச்செயலர்கள் இருவர் மற்றும் பைலட்டுகள் இருவர் உடன் பயணம் செய்தனர்.
காலை 10 மணியளவில் தவாங்கில் புறப்பட்ட ஹெலிகாப்டரின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஹெலிகாப்டர் தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பில் இருந்து விலகியது. கடைசியாக தவாங் அடுத்த செலா பாஸ் பகுதியில் வந்த ஹெலிகாப்டர் ராடரில் தெரிந்தது. அதன் பிறகு ஹெலிகாப்டர் இருக்கும் இடம் தெரியவில்லை.
ஹெலிகாப்டர் மாயமானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் அருணாசலப் பிரதேசத்தில் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் முதல்வர் டோர்ஜி காண்டு பயணம் செய்த ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஹெலிகாப்டர் மாயமானதால் உருவான பதற்றம் தணிந்தது.
தவாங் நகரில் இருந்து இட்டா நகர் சென்ற போது முதல்வர் ஹெலிகாப்டர் மாயமானது. காணாமல் போன ஹெலிகாப்டர் தார்போ ஜியோ என்ற இடத்தில் இறங்கியது தெரியவந்தது. இதையடுத்து முதல்வரை அழைத்துவர இந்திய விமானப்படை விமானம் விரைந்தது.
இந்நிலையில், தங்களது நாட்டு பகுதியில் ஹெலிகாப்டர் ஏதும் தரையிறங்கவில்லை என பூடான் அதிகாரிகள் மறுத்துள்ளதால், முதல்வர் டோர்ஜி காண்டு என்னவானார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
No comments:
Post a Comment