கோடை விடுமுறையை முன்னிட்டு ஓய்வு எடுப்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் இன்று இத்தாலி நாட்டில் உள்ள ரோமிற்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு ஓய்வெடுப் பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டு விஜயகாந்த் தனது குடும்பத்துடன் ஹாங்காங் சென்றிருந்தார்.
தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு இத்தாலியில் உள்ள ரோம் நகருக்கு விஜயகாந்த் குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டு இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து இத்தாலிக்கு சென்றார்.
விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மகன்கள் பிரபகாரன், சண்முக
பாண்டியன், மைத்துனர் சுதீஷ், அவரது மனைவி ஜோதி மற்றும் இரண்டு குழந்தைகளும் உடன் சென்றனர். இத்தாலில் உள்ள ரோம் நகரில் முக்கியமான இடங்களை சுற்றிப் பார்க்கும் விஜயகாந்த் பின்னர் அங்கிருந்து பிரான்ஸ் நாட்டிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள சில சுற்றுலா இடங்களுக்கும் விஜயகாந்த் குடும்பத்துடன் செல்கிறார். மேலும் அவர் 13 நாட்கள் இத்தாலி மற்றும் பிரான்சை சுற்றிப் பார்த்து விட்டு தேர்தல் முடிவு வெளியாகும் நாளான மே 13ந் தேதிக்கு முந்தைய நாள் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்
No comments:
Post a Comment