அனுஷ்காவின் அலம்பல் எல்லை மீறிப் போவதாக அவரின் மேனேஜர் உட்பட பலரும் வருத்தத்தில் உள்ளனர்.
அக்கட பூமியில் கவர்ச்சியை கமர்ஷியலாக்கி கோடம்பாக்கத்தாரை உஷ்ணப்பட வைத்தவர் அனுஷ்கா. அவரை தமிழுக்கு அழைத்து வரும் உற்சவத்தை தனது ‘ரெண்டு’ படம் மூலம் சுந்தர் சி துவக்கி வைக்க, அனுஷ்காவின் அலை ஆரம்பமானது.
‘வேட்டைக்காரன்’, ‘சிங்கம்’ என்று அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களுக்கு கால்ஷீட்டை அள்ளி வீச, அனுஷ்காவின் கால்ஷீட்டுக்கு இப்போது தவம் கிடக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
விஜய் இயக்கத்தில் விக்ரமுடன் ‘தெய்வத் திருமகன்’, சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாத படம், இதைத்தவிர தெலுஙகில் நாகார்ஜுனா, பிரபாஸ் படங்கள் என்று கால்ஷீட்டை காசாக்குவதில் கவனமாக இருக்கிறார். ஆனால் செய்தி இதுவல்ல.
பூஜை, ஆடியோ வெளியீடு, ப்ரிவ்யூ, பிரிமீயர் என்று சென்னை வரும்போது டிவி, பிரின்ட் மீடியாவை சந்தித்து சம்பிரதாயமாக ஹாய்... ஹலோ சொல்லுங்கள். மற்றபடி அந்த ஹாய்... ஹலோவையே வேதவாக்காக்கி அவர்கள் பில்டப் பேட்டி போட்டு விடுவார்கள்’ என்று அவருக்கு வேதம் ஓதி வருகிறார்கள்.
ஆனால் அம்மணியோ, ‘ரசிகர்களுக்கு திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன். பிரஸ் முன்னால் காட்சி கொடுக்க எக்ஸ்ட்ரா பைசா ஆகும் பரவாயில்லையா?’ என்று அங்கும் கரன்சி கணக்கு பேசுகிறார்களாம். அதனால் ஏக எரிச்சலிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்!
No comments:
Post a Comment