பூமியை காப்பாற்றுங்கள் என்று சில தினங்களுக்கு முன் நடிகர் மன்சூரலிகான் ஒரு அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கிறதா? திடீரென்று சமூகத்தின் மீது அக்கறை வரும் இவருக்கு. இப்போது சுற்று சூழலின் மீது வந்திருக்கிறது. ஆனால் நாடெங்கும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் வயல்களையும் வாய்க்கால்களையும் விலைக்கு வாங்கி பிளாட் போட்டு விற்கிற வேலையை செய்வதே இவர்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இதுவாவது போய் தொலையட்டும். இந்த பூமியை காப்பாற்றுங்கள் என்று பிரஸ்மீட் வைத்து அறிக்கை வெளியிட்டாரல்லவா ஒரு இடத்தில். இந்த இடமே வேறொருவர் பூமியாம். இந்த வீட்டில் இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்காக வந்தவர்தானாம் மன்சூர். அப்படியே வீட்டையே லபக்கிக்கொள்ள, பிரச்சனை இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது.
முதல்ல எங்க பூமியை இவருகிட்டேயிருந்து காப்பாத்துங்க என்ற கூக்குரல் இன்னும் எங்கேயிருந்தெல்லாம் கிளம்பும் என்பதுதான் தெரியவில்லை.
No comments:
Post a Comment