திருப்பூர் சுற்றுப்புற பகுதியில் பெண் போலீஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து கொலை செய்த எடப்பாடியை சேர்ந்த காம கொடூரன் ஜெய்சங்கர் (வயது 32) என்பவனை போலீசார் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஜெய்சங்கர் காவல் நீட்டிப்புக்காக திருச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து சென்று விட்டு வரும் போது சேலத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பினான்.
ஜெய்சங்கர் தப்பியதால் பாதுகாப்பிற்கு உடன் சென்ற கோவை ஆயுத படை போலீஸ்காரர் சின்னசாமி மனம் உடைந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தப்பி ஓடிய ஜெய்சங்கரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நடத்தினர்.
அண்டை மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 6க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் அனைவரையும் ஜெய்சங்கர் தான் தீர்த்து கட்டியிருக்கலாம் என்று பெங்களூர் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவர்கள் கோவை வந்து ஜெய்சங்கர் குறித்த தகவல்களை சேகரித்து சென்றுள்ளனர். தப்பி ஓடிய காம கொடூரன் ஜெய்சங்கர் பெண்களை வேட்டையாடியது எப்படி என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜெய்சங்கர் ஆரம்பரத்தில் டிரைவராக வாழ்க்கையை தொடங்கினான். மினி பஸ், டவுன் பஸ் மற்றும் பல்வேறு ரூட் பஸ்களிலும், சங்ககிரியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் லாரிகளிலும் டிரைவராக வேலை பார்த்துள்ளான். அதன் மூலம் வெளி மாநிலங்கள், மாவட்டங்களின் தேசிய நெடுஞ்சாலை பகுதியை நன்றாக அடையாளம் வைத்திருந்தான்.
பெண்கள் விஷயத்தில் படு மோசமானவன், பிஞ்சில் பழுத்தவன் அவன் 13 வயதில் பஞ்சாயத்து தலைவர் மனைவியை கற்பழிக்க முயன்று ஊர் பஞ்சாயத்தில் அபராதம் கட்டி உள்ளான். பஸ் டிரைவராக இருந்த போது போலீஸ்காரர் மனைவி இந்திரா காந்தியை தங்காயூர் காட்டு பகுதிக்கு கூட்டி சென்று கற்பழித்து கொலை செய்தான். அந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வந்த பின்னரும் ஏராளமான பெண்களை கற்பழித்துள்ளான்.
பலர் அவமானம் கருதி புகார் கொடுப்பதில்லை. தொப்பூர் தொப்பராயக்கன் பட்டியில் ஒரு கிழவியை கொலை செய்து நகை பறித்தான். கூட்டாளி செல்வனுடன் சேர்ந்து பெருந்துறை ஏரிப்பாளையம் பிரிவில் மூன்று குழந்தைகளுடன் வீட்டில் தோசை சுட்டு கொண்டிருந்த பெண்ணை மிரட்டி நகை பணம் பறித்தனர். பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் தனியாக நடந்துவந்த பெண்ணை கற்பழித்து நகையை பறித்தனர். அவன் டிரைவராக இருக்கும் போது ஏற்கனவே பழக்கக்தில் இருந்த பழனியை சேர்ந்த வசந்தா என்ற பெண்ணை தொப்பூர் வரவழைத்து 1 வாரம் உல்லாசம் அனுபவித்துள்ளான்.
பணம் தீர்ந்ததும் அவனிடம் இருந்து நகை, செல்போன் போன்றவற்றை பறித்து கொண்டு விரட்டி உள்ளான். அதே தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூர் காளிபாளையத்தில் ஒரு “தாபா” ஓட்டலுக்கு பின்புறம் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை கற்பழித்து நகையை பறித்தான். தொப்பூர் பகுதியில் போகும்போது கட்டமேடு மத்திய நாத்துப் பண்ணையில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்ணின் செயினை பிடுங்கி கற்பழித்துள்ளான். 10 நாள் கழித்து அந்த செயினை அடகு கடையில் கொடுத்தபோது அது கவரிங் செயின் என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளான். கோபத்தில் மீண்டும் அந்த பெண்ணை தேடி உள்ளான். ஆனால் அவள் கிடைக்கவில்லை.
அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பத்தலபள்ளி மார்க்கெட் வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றபோது 40 வயது பெண் “லிப்ட்” கேட்டு வண்டியில் ஏறினாள். அவளை அந்த பகுதி காட்டு பகுதிக்கு கூட்டி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளான். தீவட்டிபட்டியில் கை குழந்தையுடன் அதிகாலை வேளையில் பஸ்சில் இருந்து இறங்கிய பெண்ணை வாயை பொத்தி தூக்கி சென்று கெடுக்க முயன்றான்.
குழந்தை அழுததால் அதன் தலையில் வெட்டிவிட்டு ஓடி உள்ளான். அப்போது அவனது செல்போன் கீழே விழுந்தது. அதை பற்றி தீவட்டிபட்டி போலீசார் ஜெய்சங்கரை பிடித்தனர். அவன் எப்போது போலீசில் சிக்கினாலும் அந்த வழக்கை மட்டும் தான் செய்ததாக சொல்வான். மற்ற விவரங்களை எளிதில் கூற மாட்டான். போலீசாரும் அவனை சாதாரண குற்றவாளி என விட்டுவிடுவார்கள். இதையே தனக்கு சாதக மாக்கி பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அலுவலகம் திரும்பிய பெண் போலீஸ் ஒருவரை லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்று கொலை செய்து கற்பழித்துள்ளான்.
கடைசியாக பெண் போலீசிடம் பறித்துச் சென்ற செல்போன் மூலம் போலீசில் பிடியில் சிக்கினான். தப்பி சென்றதன் மூலம் அப்பாவி போலீஸ்காரர் ஒருவரின் உயிரையும் அவன் காவு வாங்கி உள்ளான்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர், பெருமாநல்லூர், கிருஷ்ணகிரி, சேலம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை வேட்டையாடிய மனித மிருகம் ஜெய்சங்கரை கோவை போலீசார் சுட்டுப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக தனிப்படை போலீசார் பெங்களூருவில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment