சாய்பாபாவின் மரணம் இயற்கையானது தான் என்று ஆந்திர அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மாதம் 28-ம் தேதி சாய்பாபா உடல் நலக்குறைவால் சத்யசாய் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார். அன்று முதல் அந்த மருத்துவமனையின் இயக்குனர் சபாயா தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சாய்பாபாவின் உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றே கூறினார்.
இதனால் சாய்பாபாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் சந்தேகம் அடைந்த தலித் ஜனசபை அமைப்பு தலைவர் கரம் சந்த் கடந்த 18-ம் தேதி ஆந்திர மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தார். இந்த விஷயத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு சாய்பாபாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை மனித உரிமை ஆணையத்தின் தற்காலிக தலைவர் பெத்தபெரிரெட்டி விசாரித்தார். அவர் இது குறித்து விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதற்கு ஆந்திர அரசு சாய்பாபாவுக்குக நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக விளக்கம் அளித்தது. இந்நிலையில் சாய்பாபா கடந்த 24-ம் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சாய்பாபா மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது பற்றி ஏராளமான புகார்கள் வருகின்றன அதனால் மாநில அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அது கேடடுக் கொண்டது.
இதற்கு ஆந்திர மாநில தலைமை செயலாளர் ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
சாய்பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மாநில அரசு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். சாய்பாபாவின் மருத்துவ அறிக்கை முழுவதையும் நாங்கள் பார்த்து விசாரணை நடத்தினோம். அவரது சாவில் மர்மம் எதுவும் இல்லை. அவரது மரணம் இயற்கையானது தான். சில பக்தர்கள் சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளையே கூறி வருகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment