அதிவேகத்தில் 18 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கன்னட சினிமா, லிம்கா சாதனை படைத்துள்ளது.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் மகன் சிவராஜ்குமார், நடிகைகள் யக்னா ஷெட்டி, ஆஷிதா உள்ளிட்டோர் நடித்த கன்னட மொழி திரைப்படம் "சுக்ரீவா. இப்படத்தை கேரளாவை சேர்ந்த பிரசாந்த் மாம்முள்ளி இயக்கி இருந்தார். இந்த படத்தை, அதிவேகமாக 18 மணி நேரத்தில் அவர் இயக்கினார். இப்படம் கர்நாடகாவில் வெளியிடப்பட்டு, அங்கு 100 நாட்களை கடந்து ஓடியது. குறைந்த மணி நேரத்தில் எடுக்கப்பட்ட இந்தப்படம், தற்போது லிம்கா சாதனை படைத்துள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குனர் பிரசாந்த் மாம்புள்ளி, நிருபர்களிடம் கூறியதாவது: இதற்கு முன், "பகவான் என்ற கன்னட படத்தை 19 மணி நேரத்தில் எடுத்தேன். தற்போது, 18 மணி நேரத்தில், "சுக்ரீவா படத்தை எடுத்துள்ளேன். இந்த படத்தில், 600 பேர் பணியாற்றினோம். நடிகர்கள் திறமையானவர்கள் என்பதால், என்னால் குறைந்த நேரத்தில் படத்தை எடுக்க முடிந்தது. லிம்கா சாதனை படைத்துள்ள செய்தி எனக்கு கிடைத்ததும் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அடுத்து, தமிழில் ஒரு படம் இயக்கி இருக்கிறேன். முன்னாள் அமைச்சர் ஒருவரின் பேரன், இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து, தமிழகத்தில் உள்ள பிரபல நடிகரை வைத்து பிரமாண்டமான படம் இயக்குவதற்கு தயாராகி வருகிறேன். இவ்வாறு பிரசாந்த் மாம்புள்ளி கூறினார்.
No comments:
Post a Comment