கர்நாடக மாநில பா.ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் கட்டப்பட்டது. ரூ.4 கோடி செலவில் 4 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்துக்கு ஜெகந்நாத் பவன் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டிட திறப்பு விழா 28.04.2011 அன்று நடந்தது. இதில் பா.ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து கூறியதாவது:
இந்தியாவில் நெருக்கடி நிலையின்போது நான் பெங்களூர் ஜெயிலில் அடைக்கப்பட்டேன். அப்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என்னை விட எனது குடும்பத்தினர் அதிக துன்பங்களை அனுபவித்தனர். 2, 3 மாதங்களுக்கு ஒரு முறை அவர்கள் வந்து என்னை சந்தித்துவிட்டு செல்வார்கள்.
அந்த சமயத்தில் சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார். அப்போது நீங்கள் ஜெயிலில் இருந்து விரைவில் வெளியே வருவீர்கள் என்று அவர் என்னிடம் உறுதி கூறினார். அவர் சொன்னபடியே அடுத்த ஓரிரு நாட்களில் என்னை விடுதலை செய்தனர்.
உண்மையிலேயே சாய்பாபா ஒரு மிகப்பெரிய மகான். அவர் மாபெரும் சக்தி கொண்டவர் என்பதை நான் புரிந்து கொண்டேன். அன்று முதல் அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன் என்றார்.
அரெஸ்ட் செய்யப்பட்டால் எப்படி இருக்கும் என்று ஜெயிலை பார்க்க வந்திருப்பார்.
ReplyDelete