வரும் தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டிய மாபெரும் இயக்குனர் கே.பாக்யராஜ். இவரது திரைக்கதை யுக்தியை இப்போதும் வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். சமீபத்திய தோல்விகளையும் தாண்டி நிலையாகிவிட்ட இந்த புகழுக்கு சமீபத்தில் அங்கீகாரம் கொடுத்து கொண்டாடியிருக்கிறார் சிரஞ்சீவி.
தனது மகன் ராம்சரண் தேஜா நடித்த மஹதீரா படத்தை தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியிடப் போகிறார் அல்லவா? இதற்கு தமிழில் வசனங்களை எழுதுவதற்கு யார் பொருத்தமானவர் என்று யோசித்தாராம். பொதுவாக டப்பிங் படங்களுக்கு கேரக்டர்களின் வாயசைப்புக்கு ஏற்றவாறு தமிழில் எழுதக் கூடிய ஒரே நபர் மருதபரணிதான் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் அவரை பயன்படுத்தினால் படத்திற்கு ஒரே மாதிரி டோன் அமையும் என்று கருதிய சிரஞ்சீவி இன்னும் திறமையான ஒருவர்தான் வேண்டும் என்றாராம்.
அப்போதுதான் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டார் கே.பாக்யராஜ். பொதுவாக டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுவதில்லை அவர். ஆனால் சிரஞ்சீவியே வற்புறுத்தி கேட்கும் போது மறுக்க முடியுமா? சரி என்றாராம். மிக கவனமாகவும், நளினமாகவும் பாக்யராஜ் எழுதிய வசனங்களை கேட்ட சிரஞ்சீவி, இதை அவரால்தான் செய்ய முடியும் என்றாராம் உற்சாகமாக!
No comments:
Post a Comment