முதல்வர் கருணாநிதியின் பேரனும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், தயாரி்ப்பாளராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அவருடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் குருவி, மைனா, பாஸ் என்ற பாஸ்கரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தும், பல வெற்றி படங்களுக்கு விநியோகதஸ்ராகவும் இருந்துள்ளார். இப்போது நடிகராகவும் உயர்ந்து இருக்கிறார்.
உதயநிதி எப்போதும் தனக்கென்று ஒரு கொள்கையை வைத்துள்ளார். அதாவது இவர் படங்களை தயாரித்தாலும் சரி, விநியோகித்தாலும் சரி அல்லது நடித்தாலும் சரி, எப்போதும் ஒரு ஃபார்முலாவை கடைப்பிடிப்பாராம். அதாவது அந்த படத்தில் வல்கரான காட்சிகள் எதுவும் இருக்க கூடாதாம். மக்கள் படத்தை பார்க்கும்போது அனைவரும் சிரிக்கும்படியாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டுமாம்.
தற்போது உதயநிதி ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். ராஜேஷின் முந்தைய படங்களை போன்று இந்தபடமும் முழுக்க, முழுக்க காமெடி நிறைந்த படமாகும். படத்தில் உதயநிதியுடன் கலக்கல் சந்தானமும் இணைந்து காமெடியில் அசத்த இருக்கிறார்.
No comments:
Post a Comment