ரஜினி பெயரை பயன்படுத்தி விளம்பரம் தேடுவதில் அவரது மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா இடையே போட்டி நிலவுவதாக செய்தி வெளியானது.
இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
ரஜினி பெயரை நானும், சவுந்தர்யாவும் விளம்பரத்துக்கு பயன்படுத்துவதாகவும், எங்கள் இருவர் இடையே போட்டி நிலவுவதாகவும் வெளியான செய்தி வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தங்கைக்கும் எனக்கும் மோதல் வர அவசியம் இல்லை. அவர் அனிமேஷன் படத்தை இயக்குகிறார். (அப்படின்னா கோச்சடையான் அனிமேஷன் படம் என்று உண்மையா ஒத்துகிறீங்க ...).
தனுஷ் பட விழாக்களில் அப்பா பங்கேற்றது இல்லை. அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஒரு பொறுப்புள்ள மருமகனாக இருந்து அவரது உடல்நிலை பற்றிய விவரங்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார். செய்திகளை தார்மீக பொறுப்போடு வெளியிட வேண்டும்.
என்னிடமோ தனுசிடமோ தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்.
No comments:
Post a Comment