மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்பட்டதில் இருந்து பண வீக்கமும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய அரசு கூறி வருகிறதே தவிர விலைவாசி குறைந்தபாடில்லை.
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட மொத்த விலை குறியீட்டு எண் புள்ளி விவரங்களே இதற்கு சாட்சியாகும். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த 2004, ஏப்ரல் மாதம் முதல் 2012 ஏப்ரல் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சராசரியாக 63.1 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இதன் குறியீட்டு எண் 98-ல் இருந்து 206.4 ஆக அதாவது 2 மடங்குக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. எனவே அடிப்படை நுகர்வு தேவைகளுக்கு இரு மடங்குக்கும் அதிகமாக விலை கொடுக்க வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகளாக விலைவாசி உயர்ந்து கொண்டே வந்துள்ளது. அடிப்படை உணவுப் பொருள்களின் தற்போதைய மொத்த விலை குறியீட்டு எண் வருமாறு:-
உணவு- 110.6, கோதுமை-82.3, அரிசி 83.9, முட்டை-100.2, பால்-104.6, பருப்பு வகைகள்- 111.0, உருளைக்கிழங்கு- 111.9, காய்கறிகள்-171.6, முட்டை கோஸ்-540.2 என உயர்ந்துள்ளது.
விலை உயர்வுக்கு காரணம், தேவைக்கு ஏற்ப அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தியும், சப்ளையும் இல்லாதது தான் என்று சொல்லப்படுகிறது. விலைவாசி உயர்வு ஏழைகளையும், நடுத்தர மக்களையும் அதிகமாக பாதித்துள்ளது.
No comments:
Post a Comment