இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் ஒரே நாளில் 30 ஆயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி தமிழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று பூட்டு போட்டு மூட போவதாக பல்வேறு அமைப்பினர் அறிவித்தனர். இதன்படி இன்று தமிழ் விடுதலை அமைப்பு, மனித நேய மக்கள் கட்சி, பெரியார் தி.க., சேவ் தமிழ் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் நுங்கம்பாக்கம் ஸ்டர்லிங் ரோட்டில் உள்ள புதிய தூதரக அலுவலகம் முன் திரண்டனர்.
அவர்கள் தூதரகத்துக்கு பூட்டு போடுவதற்காக அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.
இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆருண், தமிழ்தேசிய விடுதலை அமைப்பைச் சேர்ந்த கோபி, பெரியார் தி.க.வைச் சேர்ந்த தவசி குமரன் உள்பட 30 பேரை கைது செய்தனர்.
இலங்கை தூதரகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment