தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதா ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து விட்டார். சசிகலாவிடம் வாக்குமூலம் பெறும் பணி நடந்து வருகிறது. இதுவரை அவரிடம் 500 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி ஜெயலலிதா, சசிகலா தாக்கல் செய்த புதிய மனுக்களை கடந்த 21-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மே 2-ந்தேதி முதல் விசாரிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது சசிகலாவிடம் 41 கேள்விகள் கேட்கப்பட்டன. ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சசிகலாவின் வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்தது எப்படி என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment