குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் கனடா வாழ் குஜராத்தியர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்ற உள்ளார்.
குஜராத் மதக் கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருந்து வருகிறது. தொடர்ந்தும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க இந்திய குஜராத்திகள் அசோசியேசன் குஜராத் தினத்தையொட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் குஜராத் முதல்வர் மோடி அகமதாபாத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுகிறார். அமெரிக்காவின் முக்கிய 12 நகரங்களில் இந்த உரை ஒளிபரப்பப்படுகிறது.

No comments:
Post a Comment