இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் உள்ளூர் பி.ஜே.பி பிரமுகர் உள்பட இருவரை மாவோயிஸ்டுகள் நேற்று கடத்தியுள்ளனர். கடந்த மாதம் சுகமா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டு 12 நாட்களுக்குபின் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று மாலை சுக்மா மாவட்ட பி.ஜே.பி. செயலாளர் மோசாக்கி ஜோகா பஸ் மூலம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மாவோயிஸ்டுகள் பஸ்சை வழி மறித்து அவரை கடத்தி கொண்டுபோய்விட்டனர்.
டோர்நாபால் எனும் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் மோச்சாக்கி காச்சி எனும் வியாபாரியை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றுள்ளனர். உடனடியாக தேடுதல் பணியை தொடங்கிவிட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment