கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எட்டியூரப்பா வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது. சுங்க முறைக்கேடு வழக்கில் நேற்று வழக்கு பதிவு செய்யபட்டதை அடுத்து இந்த சோதனை நடைபெறுகிறது. சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் 8 மாதங்களுக்கு முன்பு கர்நாடகா முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா இழந்தார்.
புதிய முதல்-மந்திரியாக சதானந்த கவுடா பதவி ஏற்றார். லோக் ஆயுக்தா அமைப்பில் சிறை தண்டனை பெற்ற எடியூரப்பா, ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் முதல்-மந்திரியாக பல தடவை முயற்சி செய்தார். பா.ஜ.க. மேலிடத்தலைவர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் எடியூரப்பாவின் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.
இந்த நிலையில் எடியூரப்பா மீதான சட்டவிரோத சுரங்கத் தொழில் குற்றச்சாட்டுக்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள 2 வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருகிறது.
மேலும் டாலர்ஸ் காலணி மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. எட்டியூரப்பா மகன்கள் ராகவேந்திரர் மற்றும் விஜயேந்தர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. எட்டியூரப்பாவின் மருமகன் சோகன் குமார் வீட்டிலும் சி.பி.ஐ சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment