இந்தியாவில் சுகாதார திட்டம் மற்றும் பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு போன்ற சூழலிலும் கற்பம் அடைந்த பெண்கள் மரணமடைவதில் உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.
2010 ம் ஆண்டு உலகஅளவில் 2,87,000 பெண்கள் கற்பகாலத்தின் போதும் குழந்தைபெரும்போதும் மரணமடைவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
இதில் இந்தியாவில் 19 சதவீத மரணமும் (56,000 பேர்கள்), நைஜீரியாவில் 14 சதவீத மரணமும் (40,000 பேர்கள்) ஏற்படுவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இம்மரண விகிதம் (எம்.எம்.ஆர்.) 1990 ம் ஆண்டில் 10,00,000 குழந்தை பிறப்பிற்கு 400 மரணங்கள் என்ற நிலையில் இருந்து 2010 ம் ஆண்டு 10,00,000 குழந்தைகள் பிறப்பிற்கு 210 மரணங்கள் என்று குறைந்துள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் மரணம், குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக ரத்த போக்கு, கற்பகாலத்தின்போது ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், பாதுகாப்பற்ற கர்ப்ப கலைப்பு போன்ற காரணங்களால் ஏற்படுவதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
இருந்தபோதிலும், கடந்த இருபது வருடங்களில் மரண விகிதம் பாதியாக குறைந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment