மதுரை ஆதீனம் அருணகிரி சுவாமிகள் கும்பகோணம் அருகே கஞ்சனூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆதீனத்தில் வாரிசு நியமிப்பதற்கு எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. தகுதியானவரை நியமிக்கும் பட்சத்தில் மற்றவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. மதுரை ஆதீனம் பழமை வாய்ந்த ஆதீனமாகும். இந்தியாவிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட குருமகாசன்னிதானம். மதுரை ஆதீனத்திற்கு இளைய சன்னிதானமாக தகுதியானவரை தேடி பிடித்து நியமித்துள்ளோம். இதில் மரபு ஏதும் மீறவில்லை. அதேபோல் அவருக்கு தீட்சை உள்பட எல்லாம் முறையாக செய்யப்பட்டுவிட்டது. இவரை தேர்ந்தெடுத்தால் பிரச்சினை வரும் என்று முன்பே தெரியும். தெரிந்தே தேர்ந்தெடுத்தோம். ஆங்கிலப்புலமை, தியானபீடம் வைத்துள்ளார். 10 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு சென்று பல சீடர்களை உருவாக்கியுள்ளார்.
அவர் தகுதியானவர்தான். நான் தொடக்கத்தில் தி.மு.க.வில் இருந்தது உண்மையானதுதான். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை பொறுத்தவரை மரியாதைக்குரியவர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எனது தந்தை போன்றவர். அவர் எனக்கு எந்த சிறப்பும் செய்யவில்லை. அவரிடம் நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. மரியாதை மட்டுமே எதிர்பார்த்தோம்.
திருவள்ளுவர் சிலையை மதுரை ஆதீனம் திறந்துவைத்தால் மரியாதை இருக்கும். அது போன்ற மரியாதையை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அந்த மரியாதை கிடைக்கவில்லை. அ.தி.மு.க. என்பது நெருப்பாற்றில் நீந்தி வந்த சிங்கம். கடந்த ஓர் ஆண்டில் 100 ஆண்டில் செய்யவேண்டிய பல சாதனைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்துள்ளார். இந்தியாவின் பிரதமராக வருவதற்கு அவர் எல்லா தகுதியும் பெற்றுள்ளார். அவர் பிரதமராக வருவது உறுதி.
நான் இளைய சன்னிதானம் பிடியில் இருப்பதாக கூறுகிறார்கள். மந்திரத்தாலோ, மாயையாலோ, கருப்புமையாலோ என்னை யாரும் வசியப்படுத்த முடியாது. எதுவும் என்னை கட்டுப்படுத்தாது.
இவவாறு மதுரை ஆதீனம் கூறினார்.
முன்னதாக மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நித்தியானந்தா கூறியதாவது:-
காஞ்சி ஜெயேந்திரர் சார்பில் சுந்தரேச அய்யர் வருவதாக போன் மூலம் தகவல் வந்தது. அது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வரவில்லை. கருத்தை வாபஸ் பெறவில்லை என்றால் வழக்கு தொடரப்படும். முறையாக 7 தீட்சை பெற்ற பிறகே இளைய சன்னிதானமாக அறிவிக்கப்பட்டுள்ளேன். என் மீது போடப்பட்டுள்ள வழக்கு தானாக இயற்கை எய்திவிடும்.
திருவாவடுதுறை போன்ற ஆதீனங்கள் என்னை மனிதனாக கூட பார்க்கவில்லை. என்னிடம் தன்னிலை விளக்கம் கூட பெறவில்லை. என்னை நிற்கவைத்து பேசினால் கூட சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆதீனங்கள் 10 நாட்களுக்குள் வாபஸ் பெற தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் எதுவும் தெரிவிக்காததால் சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆன்மிக புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது.
இவ்வாறு நித்தியானந்தா கூறினார்.

No comments:
Post a Comment