ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு ராணுவத்தை வாபஸ் பெறுவது, நிதி உதவி அளிப்பது ஆகியவை குறித்து விவாதிக்க அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்தித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மறுத்து விட்டார்.
முன்னதாக பாகிஸ்தான் பகுதியில் மீது அமெரிக்க ராணுவ விமானம் திடீர்தாக்குதல் நடத்தியதால் 25க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதனையடுத்து பாகிஸ்தானில் அமெரிக்க படை தங்குவதற்கும், பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகளுக்கு தேவையான உணவுப் பொருள்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்கப்படும் சாலை வழியை பயன்படுத்தவும் பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் அமெரிக்கா பாகிஸ்தானிலிருந்து வெளியேறியது.
இந்த பிரச்சினையில் அமெரிக்க அரசுக்கு பாகிஸ்தான் ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்பதாலேயே சர்தாரியை சந்திக்க பராக் ஒபாமா மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் நேட்டோ படை பிரச்சினையால் இரு நாடுகள் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment