சீன ராணுவத்தின் அத்துமீறல் குறித்து ராஜ்யசபாவில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
கடந்த மாதம் மார்ச் 16 ம் தேதி ஒரு முறையும் மார்ச் 19 ம் தேதி மற்றொரு முறையும் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் ஹிமாச்சல் பிரதேச எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதுகுறித்து சீனாவின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலும் இப்பிரச்சினையை ஹாட் லைன், பிளாக் மீட்டிங், எல்லையோர படையின் கூட்டுக்கூட்டம், மற்றும் இரு தரப்பு அதிகாரிகள் சந்திப்பு போன்ற செயல்கள் மூலம் இதற்கு தீர்வு காணலாம் என தெரிவித்தார்.
மற்றொரு கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பாதுக்காப்பு துறை அமைச்சர், சீனாவை விட இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்ததாக தெரிவித்தார்.இது உலக அளவில் 10 சதவீதம் எனவும், 2007-08 ம் ஆண்டில் இதன் மதிப்பு ரூ. 10166 .08 கோடி, 2009 - 10 ம் ஆண்டில் ரூ. 13411 . 91 கோடி, 2010 - 11 ஆண்டு சுமார் ரூ. 15443 .01 கோடி மதிப்பிலும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment