தலாய்லாமாவை திங்கட்கிழமை இங்கிலாந்து பிரதமர் கேமரூன் மற்றும் துணை பிரதமர் நிக் பிளக்ஸ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இச்சந்திப்பிற்கு சீனா கடுமையாக ஆட்சேபனை தெரிவித்திருந்தது.
இதற்கு பிரிட்டனும் இது பிரதமர் யாரை சந்தித்து பேசுவது என்பது தனிப்பட்ட விஷயம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், யாருடனான சந்திப்பு என்பது முக்கியம் என்று தெரிவித்த சீனா, இது சீன உள்விவகாரங்களில் தலையிடுவதாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், தலாய்லாமா திபெத் தனி நாடு வேண்டுமென போராடி வருபவர் என்றும் அவருடன் எந்த நாடும், எந்த தலைவரும் சந்தித்து பேசுவதை சீனா ஏற்று கொள்ளாது என்றும், இங்கிலாந்து இது குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment