அன்னா ஹசாரே குழுவினரை தொடர்ந்து குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் எம்.பிக்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.தற்போது ராம் தேவும் எம்.பி.க்களை கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான யாத்திரையை சத்தீஸ்கரில் தொடங்கி வைத்து பேசும்போது இக்குற்றச்சாட்டை ராம்தேவ் கூறினார். மேலும், விவசாயிகள் குறித்தும் தொழிலாளர்கள் குறித்தும் அவர்களுக்கு எந்த கவலையும், அன்பும் இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;
எம்.பிக்களில் பலர் பணத்திற்கு நண்பர்களாகவும், அடிமையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், கொள்ளையர்களாகவும், கொலையாளர்களாகவும் இருக்கிறார்கள்.
அவர்கள் மனித வடிவில் உள்ள சாத்தான்களாக இருக்கின்றனர் என்றார். இருந்தாலும், எம்.பிக்களில் சில நல்லவர்களும் இருப்பதாகவும் அவர்களை தான் மிகவும் மதிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் ஊழல்வாதிகளை பாராளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ராம்தேவ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment