சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன். கடந்த மாதம் 21-ந்தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனனை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்திலிருந்து பலர் குரல் கொடுத்தனர்.
மாவோயிஸ்டுகளோடு பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலெக்சை மாவோயிஸ்டுகள் இம்மாதம் 3-ந்தேதி விடுவித்தார்கள். விடுதலையான பிறகு சென்னைக்கு வந்துள்ளார். தன்னை மீட்பதற்கு பாடுபட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மே 16-ந்தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். நேற்றைய தினம், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்து நன்றி கூறினார்.
மேலும், இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கலெக்டரின் மனைவியும் உடன் இருந்தார். தன்னை விடுதலை செய்ய குரல் கொடுத்ததற்காக வைகோவிடம் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment